Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆளுநர் உரையின் சிறப்பு அம்சம்

ஆளுநர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம்இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் பிறப்பு அம்சங்கள் வருமாறு..!

* கச்சத்தீவை மீட்டு பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.

  * மீனவர்களின் நலனுக்காக வழங்கப்படும் உயர்த்தப்பட்ட உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.


* அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற ஏழை எளிய மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* அனைத்து இடையூறுகளும் களையப்பட்டு தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.

* அமைதி, செழிப்பு, வளர்ச்சியை உறுதிப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி பூண்டுள்ளார்.

* தேர்தல் வாக்குறுதிகளை பதவியேற்ற முதல் நாளிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். 

* விவசாயிகளின் நலன்களை மையப்படுத்தி வேளாண்துறை மேம்பாட்டுக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* வேளாண்துறை எந்திரமயமாக்கல், நீரைச்சேமிக்கும் நீர்ப்பாச முறைகள் தொடரும்.

* முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழும்.

* கிரானைட் மற்றும் தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* கால்நடை மேம்பாட்டுத்துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும்.

* ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* நெம்மேலி, போரூர் பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

* சின்னமலை- விமான நிலையம், ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரை மெட்ரோ பணி ரூ.3,770 கோடியில் செயல்படுத்த ஒப்புதல்.

* வெள்ள பாதிப்புகளைத் தடுக்க விரிவான வெள்ளத் தடுப்பு திட்டங்களை அரசு விரைவாக தயாரிக்கும்.

* அம்மா அழைப்பு மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

* காவல்துறையை நவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

* தமிழகத்தை அமைதிப்பூங்காவாகத் திகழச் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

 * காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுதந்திரத்துடன் கையாள உரிய வழிவகை செய்யப்படும்.

* உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயிர் வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையப்படும்.

* தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு இலங்கை அரசு மூலம் தீர்வு காண மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

* முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெறப்படும்.

* இலங்கையில் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமைகள் கிடைப்பதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கப்படும்.

 * இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்வி பயிலும்மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

* தமிழகத்தில் உயர்கல்வி பயில அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.

* இலங்கைக் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். 

* இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 

* ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* 3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்திறன் உருவாக்கப்படும். 

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

* தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும்.

* உயர்கல்வி பயில மாணவர்களுக்கான நிதி உதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும்.

* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்படும்.

* சென்னை அருகே மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மருத்துவ பொதுநுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தொடர்ந்து பாடுபடுவோம்

No comments:

Post a Comment