தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன் அவர்களை 03.06.2016 அன்று பொதுசெயலர் செ.முத்துசாமி அவர்கள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர்கள் பிரச்சினை குறித்து கோரிக்கைகள் சமர்பித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது .
அப்போது பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தவும் சென்ற ஆண்டு மாறுதல் பெற்று இன்னமும் விடுவிக்கப் படாமல் உள்ள ஆசிரியர்களை உடன் விடுவிக்கவும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது .அதற்கு இயக்குனர் மாறுதல்கலந்தாய்வு குறித்து
இயக்குநர்கள் அளவில் இன்னமும் மாறுதல் பொது விதிகள் தொடர்பாக கருத்து தொகுப்புகள் எதுவும் பள்ளி கல்வி துறை முதன்மைச் செயலாளருக்கு பரிந்துரைக்க வில்லை விரைவில் அனுப்ப உள்ளோம் என்று கூறினார்.
தற்போது நடைமுறையில் உள்ல மாறுதல் விதிகளில் ஏதேனும் திருத்தம் வேண்டி தங்களது கருத்துகள் கூறக்கேட்டார் இயக்குனர்.
அதற்கு பொதுசெயலர் மாறுதலில் கலந்துகொள்ள தற்போதுள்ள நடைமுரையில் மே -31 அன்று ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக மாறுதல் கலந்தாய்வு தேதியில் ஓராண்டு பணி முடித்திருந்தால் விண்ணப்பத்தாரருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது
மேலும்,மாறுதல்பெற்று நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் உள்ல ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்களை உடன் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது
இயக்குநர்களின் பரிந்துரைக்குப் பின் பள்ளி கல்வி துறை முதன்மைச் செய்லாளர் விதிகளை பரிசீலிப்பார்.பின் பள்ளி கல்வி துறை அமைச்சர் பார்வைக்குச் செல்லும் அதற்கு பின்னர்தான் மாறுதல் விதிகள் வெளிவரும். மாறுதல் விதிகள் வெளிவந்தபின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் தொடர்பாக விவரம் தெரிவிப்பார்கள். வழக்கம்போல ஜூலை மாதம் முதல் வாரத்தில்தான் பொது மாறுதல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகிறது
இச்சந்திப்பின் போது பொதுசெயலர் திரு செ.முத்துசாமி அவர்களுடன் செ.வடிவேலு ,மற்றும் தலைமை நிலையசெயலர் சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்
No comments:
Post a comment