Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

கழிவறை கிளீனரை குடிக்க செய்து ராகிங்: மருத்துவமனையில் மாணவி

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அஸ்வதி(19). இவர் கர்நாடகாவில் குல்பர்காவில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 9ம் தேதி சீனியர் மாணவிகள், அஸ்வதியை கட்டாயப்படுத்தி டாய்லட் கிளீனரை குடிக்க செய்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால்அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில், உணவுக்குழாயின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இந்த வசதி அந்த மருத்துவமனையில் இல்லை. தனியார் மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை வசதி உள்ளது. இதற்கு பெரும் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தளவுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதியில்லாததால், தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அஸ்வதியை ராகிங் செய்த சீனியர் மாணவிகளும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தான் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment