Labels

rp

Blogging Tips 2017

புதிய இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பயண அட்டைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

நடப்பு கல்வி ஆண்டுக்கான பேருந்து இலவச பயண அட்டை வழங்கப்படும் வரை கடந்தாண்டு தரப்பட்ட இலவச பயண அட்டைகளை பயன்படுத்த மாணவர்களை அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அதிகாரி களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (நேற்று) கலந்து கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.வி.சங்கர், அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களும் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில், “அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் வருவாயை பெருக்கிட வேண்டும். பேருந்துகளை சிறப்பாக பராமரித்து பயணிகளின் தேவையறிந்து சரியான நேரத்தில் இயக்கிட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் உள்ள மாணவர் களுக்கு இலவச பயண அட்டையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய இலவச பயண அட்டை வழங்கும் வரை கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட இலவச பயண அட் டையை கொண்டே பயணிக்க அனு மதிக்க வேண்டும். அனைத்து பேருந்து களும் முழுமையாக சுத்தம் செய்யப் பட்டுள்ளதா என்பதை பரிசோதித்த பின்னரே அவற்றை இயக்க வேண்டும். சிக்கனமற்றதாக இயக்கப்படும் வழித்தடங்களை ஆய்வு செய்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தட சீரமைப்பு செய்ய வேண்டும்.” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment