Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தனியார் பள்ளிகளுக்கு இணையான அரசு பள்ளிகள்:புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உறுதி.

புதுச்சேரியில் தனியார் பள்ளி களுடன் போட்டி போடும் வகையில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என ஆளுநர் கிரண்பேடி உறுதி அளித்திருக்கிறார்.அரசு பள்ளி மாணவர்களின் படிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘வித்யாஞ்சலி யோஜனா’ என்ற திட்டத்தை வரும்16-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.


இத்திட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்படும்.விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு, சுகாதாரம், யோகா, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான வாழ்க்கை, இசை மற்றும் பிற கற்றல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைகளில் தங்களிடம் உள்ள திறமைகளை மாணவர்களுக்கு கற்று கொடுக்க இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். இந்த கலந்துரையாடல் வீடியோ பதிவு டெல்லியில் 16ம் தேதி நடைபெறும் வித்தியாஞ்சலி யோஜனா தொடக்க நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.

இத்திட்டத்திற்கான புதுச்சேரி மாநிலத்தின் பிரதிநிதியாக ஆளுநர் கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டத்துக்கு தகுதியான பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி நீடராஜப்பர் வீதியில் உள்ள சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை இத்திட்டத்தில் சேர்க்க அரசு முடிவு எடுத்துள்ளது.இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி நேற்று சவரிராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு 1 முதல் 8ம் வகுப்புவரை உள்ள மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகளின் பாடபுத்தகம்ஒன்றை வாங்கி அதில் இருந்த தங்கக்கோடாரி நீதிக்கதையை வாசித்து விளக்கம் அளித்தார். மாணவிகளிடமும் விளக்கம் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து ‘‘சிறுவயதிலேயே பெரிய சாதனையாளராக வரவேண்டும்'' என்ற நோக்கத்தில் தினசரி புத்தகங்களை படித்து தன்னுடைய அறிவை வளர்த்துக்கொண்டேன். உடன்பிறந்த சகோதரிகளிடமும், எனது தோழிகளிடமும் உள்ள நல்ல பழக்கங்களை சேமித்து வைத்து கொண்டேன்.அந்த நற்பண்புதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். நல்ல பண்புகளை சேமித்து வைக்க வேண்டும். அதே போல மாணவர்கள் நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் படிக்கின்ற நேரத்தில் படிக்க வேண்டும். விளையாடும் நேரத்தில் விளையாட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் நேரம் உள்ளது. அதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய திறனையும், நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.’’ என்றார்.தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘‘மேற்கத்திய நாடுகளில் வீடுகள் அசுத்தமாக இருந்தாலும், அங்குள்ள தெருக்கள் சுத்தமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் வீடுகள் சுத்தமாக உள்ளது. ஆனால் தெருக்கள் அசுத்தமாக உள்ளது. வாரந்தோறும் பள்ளி இறுதி நாளான வெள்ளி மாலை பள்ளி வகுப்பறை, நாற்காலிகள், மேஜை அனைத்தையும் மாணவர்களே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன்னோடியாக ஆசிரியர்களும் செயல்பட வேண்டும். இதுபோன்று செய்தால் புதுச்சேரி இந்தியாவிலேயே சுத்தமான பள்ளிகளைக் கொண்ட மாநிலமாக திகழும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும்.’’ என்றார்.பின்னர் ஆசிரியர்களுடன் ஆளுநர் சிற்றுண்டி அருந்தி விட்டு, அவர்களுடன் நின்று குழு படம் எடுத்துக் கொண்டார்.பின்னர், செய்தியாளர்களிடம் ஆளுநர் கிரண்பேடி கூறும்போது: ‘‘வித்தியாஞ்சலி திட்டத்தின் மூலம் இந்தியாவில் புதிய தலைமுறை உருவாகும். வருகாலத்தில் நல்ல உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் வருவார்கள் '' என்றார்.

‘அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்துவீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ''தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போடும் வகையில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும். தரம் உயர்ந்தால் அனைவரும் அரசு பள்ளியை தேடி வருவார்கள்.நகரப்பகுதியிலேயே ஆய்வு செய்கிறீர்கள், கிராமப்பகுதிகளுக்கு செல்வீர்களா?' என்ற கேள்விக்கு,“நான் வந்து 11 நாட்கள்தான் ஆகிறது. விரைவில் கிராமப்புறங்களுக்கு சென்று அரசு பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்வேன்’’ என்றார்.

ஆளுநர் வியப்பு

வகுப்பறையில் மாணவிகளுடன் ஆளுநர் கிரண்பேடி கலந்துரையாடல் நடத்தியபோது நான் யார் தெரியுமா? என்று கேட்டார். அப்போது 8ம் வகுப்பு மாணவி ராதிகா ‘‘நீங்கள் நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, சிறந்த சேவைக்காக ஜவஹர்லால் நேரு விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகள் வாங்கி உள்ளீர்கள். எங்கள் பள்ளிக்கு வந்து எங்களை சந்தித்தது பெருமையாககருதுகிறோம்’’‘இது எப்படி உனக்குத் தெரியும்?' என்று ஆளுநர் கேட்டார். ‘‘7ம் வகுப்பு பாட புத்தகத்தில் உங்களைப்பற்றி பாடம் உள்ளது.’’ என்றனர். அதனை கேட்ட ஆளுநர் மகிழ்ச்சி அடைந்து மாணவர்களை பாராட்டினார்.

No comments:

Post a Comment