Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது: போலீஸ் அறிவுரை

மாணவ–மாணவிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் போலீஸ் கமி‌ஷனர் அறிவுருத்தியுள்ளார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு தனியாக வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்த அனுமதிப்பதால் முன்பின் தெரியாத நபர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு நமது குழந்தைகளிடம் நயவஞ்சகமான முறையில் நல்லவர்களை போல தகவல்கள் பரிமாற்றம் செய்து, ஆபாச படங்களை காட்டி, அதுபோல ஜாலியாக இருக்கலாம் என்பது போன ஆசையை காட்டி, திருமண ஆசையை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிமையில் சந்திக்கலாம் என்று அழைத்து அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டியும் இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

அல்லது விபசாரத்தில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்து விடுவர். எனவே தங்கள் குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை துவக்காமல் இருப்பது நல்லது.

மேலும் பொதுமக்களும், முன்பின் தெரியாமல் வரும் நபர்களிடம் இருந்து வரும் பதிவுகளை விருப்பம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். குழந்தைகளுக்கு இணையதள வசதியை பயன்படுத்துகின்ற வகையில் உள்ள செல்போன்களை வாங்கிதர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats