தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அறிமுகம் செய்துள்ள ‘மைஸ்பீடு' எனும் செயலியைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா? இந்தச் செயலி மூலம் பயனாளிகள் தங்கள் இணைய இணைப்பின் வேகம் பற்றிய விவரங்களை அறியலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது
பயனாளிகள் இருப்பிடத்தைக் குறிப்பிடும் வசதியும் இருக்கிறது. இதை நிராகரிக்கவும் செய்யலாம். இணைய வேகத்தைத் தெரிந்துகொண்டு பின் அதை டிராய் அமைப்புக்குத் தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது. ஆனால் இவ்வாறு தகவல் தெரிவிப்பது புகார் செய்ததாகக் கருதப்படக் கூடாது என்றும் டிராய் தெளிவுபடுத்தியுள்ளது.
செயலியைத் தரவிறக்கம் செய்ய:https://play.google.com/store/apps/details?id=com.rma.myspeed
No comments:
Post a comment