Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சி.ஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழன்!

இந்தியளவில் நடைபெறும் தேர்வுகளில் சி.ஏ. தேர்வு (Chartered accountant) மிகவும் கடினமான ஒன்று. அதில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பதே கடும் சவால். ஆனால், இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில், இந்த ஆண்டு ஸ்ரீராம் மூலம் தமிழகம் அந்தப் பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

“ரொம்ப.... ரொம்ம்ம்ம்ப... சந்தோஷமா இருக்குங்க..!’’ பெருமையும், பூரிப்புமாகப் பேசுகிறார் ஸ்ரீராம்.
''பெருசா ரிஸ்க் எடுத்து 24 மணிநேரமும் படிச்சேன்லாம் பொய் சொல்ல மாட்டேன். தினம் ரெண்டு மணி நேரம் மட்டும்தான் படிப்பேன். ஆனா, ஒரு நாள் கூட அந்த ரெண்டு மணி நேரம் மிஸ் ஆகாது. அன்னன்னைக்கு என்ன படிக்கணும்னு தெளிவா திட்டமிட்டு படிச்சிருவேன். எங்க அப்பா ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துல டெக்னீஷியன். அம்மா, பத்மா பெரம்பலூர்ல மாவட்ட நூலக அலுவலர். குடும்பமும் நண்பர்களும் கொடுத்த ஆதரவில் கவனம் சிதறாமல் படிச்சேன். சிம்பிள்!'' என கண்சிமிட்டுகிறார் ஸ்ரீராம்.
7 ம் வகுப்பிலிருந்தே சி.ஏ படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார் ஸ்ரீராம். 2012-ல் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சி.ஏ படிப்புக்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டார். அந்த வருடம் சி.ஏ படிப்பின் முதல்நிலை தேர்வில் 180/200 மதிப்பெண் பெற்று சேலம் அளவில் முதலிடம் பிடித்தவர், 2013-ல் சி.ஏ இன்டர் தேர்வில் 551/700 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் ஏழாம் இடம் பிடித்திருக்கிறார். 2014-ல் சி.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடமும். தற்போது இறுதி தேர்வில் 613/800 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடமும் பிடித்திருக்கிறார்.
சி.ஏ. தேர்வுக்கென தயாராகுபவர்களுக்கு ஸ்ரீராம் சொல்லும் டிப்ஸ் என்ன..?
1. தேர்வு நேரத்தில் மட்டும் படித்தால் சி.ஏ தேர்வில் முதலிடம் பிடிப்பது கடினம். படிப்பிற்கு என கால அட்டவணை உள்ளது. 8-10 மாதங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். அதுதான் முதலிடத்தை எட்ட வைக்கும்.
2. முழுக் கவனத்துடன் படிக்க வேண்டும். மற்ற படிப்புகளோடு துணைப்படிப்பாக இதனைத் தேர்வு செய்யாமல் முழுமையாக இதனை முழுகவனத்துடன் படிப்பது அவசியம்.
3. பள்ளிப்படிப்பை முடித்ததும் சி.ஏ படிக்க துவங்குபவர்கள் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். இதனை முடிக்காவிட்டால் படித்த 4 வருடங்களும் வீண் என்ற நிலைதான். இதில் நாம் முதலீடு செய்வது நேரம் மற்றும் நமது எதிர்காலத்தையும்தான். அதனால் அதன் மதிப்பறிந்து தேர்வுக்கான முழு முனைப்பையும் செலுத்த வேண்டும்.
4. பெற்றோர்களிடம் தங்களுக்கு சி.ஏ படிப்பதில் ஆர்வம் உள்ளது என்பதை புரிய வைப்பதும் அவசியம். மற்ற படிப்புகளை போல் அல்லாமல், சி.ஏ படித்தால் முதலீடு எதுவும் இல்லாமல் தொழிலை நாமே துவங்கலாம் என்பதை எடுத்துச் சொன்னாலே பல பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
6. சி.ஏவை தேர்வு நேரப் படிப்பாக அணுகாமல், அதனைப் பயிற்சியாக அணுகினால் அதுவே வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்.

No comments:

Post a Comment