Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

உள்ளாட்சி தேர்தலை நடத்த 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் நேர்முக உதவியாளர் நியமனம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் கூடுதலாக நேர்முக உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 23ம் தேதி
முடிகிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு ரூ.183 கோடி
ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் கலெக்டருக்கு கூடுதலாக 32 நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்), 32 பிடிஓக்கள், 32 உதவியாளர்கள், 385 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 385 உதவியாளர்கள், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய 31 மாவட்டங்களுக்கு 31 கணினி உதவியாளர்கள், 385 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 385 கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட 903 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் கட்டமாக உதவி இயக்குநர் அந்தஸ்தில் 32 மாவட்டங்களுக்கு தேர்தல் பிரிவுக்காக கலெக்டருக்கு நேர்முக உதவியாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ெசன்னை ஊரக வளர்ச்சித் துறை இயக்ககத்திற்கு உதவி இயக்குநர் (தேர்தல்) பணிக்கு நக்கீரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment