Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஓய்வூதியருக்கு தனி அடையாள அட்டை: ஓ.பன்னீர்செல்வம்

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு தனி அடையாள அட்டை அளிக்கப்படும் என்று நிதி, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில், ஓய்வூதியர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். கூட்டுறவுத் தணிக்கைத் துறையிலுள்ள அனைத்து நிலையிலான தணிக்கையாளர்களுக்கும், அவர்களின் தரம்-திறமையை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்
.

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையிலுள்ள அனைத்து நிலையிலான தணிக்கையாளர்களுக்கும் அவர்களின் தணிக்கைத் தரத்தை மாநில கணக்காயர் அலுவலர்களின் தணிக்கைத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும். இதன்படி, சென்னை நடேசன் கூட்டுறவுப் பயிற்சி மையத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தொடர் பயிற்சி அளிக்கப்படும்.

கருவூல கணக்குத் துறையிலுள்ள கணக்கர், கண்காணிப்பாளர், உதவி கணக்கு அலுவலர்களுக்கு நிதி கணக்கியல், ஓய்வூதியம் உள்பட அலுவலக நிர்வாகம் தொடர்பாக பயிற்சி கொடுக்கப்படும் என்றார்.

ஓய்வூதியர்களுக்கு காப்பீடு: இதனிடையே, 2014 ஜூலையில் இருந்து 2016 ஜூலை வரையிலான காலத்தில் 99,317 பயனாளிகள் மருத்துவ சிகிச்சையை கட்டணமில்லாமல் பெற்றுள்ளனர் என்று ஓய்வூதியதாரர்களுக்கான திட்டங்கள் தொடர்பான நிதித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment