Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி : தொடக்க கல்வி இயக்குநர் தகவல்.

தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசிய எரிசக்தி மேலாண்மை இயக்குநரகம் சார்பில் எரிசக்தியை சேமிப்பதில் தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகள் அளவிலான ஓவிய போட்டி, 4, 5 மற்றும் 6ம் வகுப்புக்கு ‘ஏ’ என்ற பிரிவிலும், 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பி’ என்ற பிரிவிலும் நடத்தப்பட வேண்டும். ‘ஏ’ பிரிவில் ‘ஒரு வாட் மின்சாரத்தை சேமித்து அதிக மின்சாரத்தை சேமிப்போம்’, ‘வாருங்கள் நாம் ஒருங்கிணைந்து மின்சாரத்தை சேமிப்போம், முன்னேற்றத்தின் பங்குதாரர்கள் ஆவோம்’.


 ‘விழிப்புணர்வு கொண்டவர்களாக திகழ்ந்திடுங்கள், எரிசக்தியை மிகவும் கவனமாக உபயோகப்படுத்திடுங்கள்’ என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடத்த வேண்டும்.‘பி’ பிரிவுக்கு ‘எரிசக்தி சேமிப்பு ஸ்மார்ட் நகரங்களை நோக்கி ஒரு ஸ்மார்ட் படி’, ‘கார்பன் தடத்தை குறைத்திடுங்கள்’, ‘போலாரை பாதுகாக்க சோலார் பயன்படுத்துங்கள்’ ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டுபள்ளி அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு படைப்புகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் சென்னை, தி.நகரில் உள்ள பவர் கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியாவின் பொதுமேலாளருக்கு(எச் ஆர்) அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats