Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

'ஆல் பாஸ்' வேண்டாம்; நிபுணர் குழு பரிந்துரை

புதுடில்லி: புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, 'ஆல் பாஸ்' என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது.
குறைந்து வரும் திறமை:
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஆனால், இந்த முறையால், மாணவர்களின் திறமை குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. 
189 பக்க அறிக்கை:
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவது குறித்து பரிந்துரைகள் அளிப்பதற்காக, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக் குழு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில், 'ஆல் பாஸ்' முறையை கைவிட வேண்டும் என்ற முக்கிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. 
ஆராய்வு:
இதற்கிடையே, மாநில பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர்கள் அடங்கிய, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், வரும், 25ல் நடக்க உள்ளது; அதில், இந்த பரிந்துரைகள் குறித்து ஆராயப்பட உள்ளது. 

No comments:

Post a Comment