Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானர் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெ. உடல் வைக்கப்படுகிறது

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானர் - அப்பல்லோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெ. உடல் வைக்கப்படுகிறது இன்னும் சிறிது நேரத்தில் போயஸ் தோட்டம் ஜெ. உடல் கொண்டு செல்லப்படுகிறது தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா (68) மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 5ம் தேதி அதாவது திங்கட்கிழமையான நேற்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவிற்கு இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணியளவில் பிரிந்தது.

No comments:

Post a Comment