Labels

rp

Blogging Tips 2017

கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

பள்ளி சென்று இடையில் நின்ற மாணவர்களின் கல்வியை தொடரவும், அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், அனைவருக்கும் கல்வி திட்டம்
மூலம் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது.


இதற்கு உதாரணமாக மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் ஊக்கத் தொகை இப்படிப்பட்ட செலவினங்களுக்காக பல கோடிகளை ஒதுக்கி செலவிடுகிறது மத்திய அரசு. 

இந்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் செயல்பாடுகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் சென்றதையடுத்து திட்ட இயக்குநர் உஷாராணி தலைமையிலான குழு, இரண்டு நாட்கள் கடலூரில் முகாமிட்டு விசாரணை செய்ததன் அடிப்படையில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இத்திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசனை தற்காலிக பணிநீக்கம் செய்து திட்ட இயக்குநர் உத்தரவிட்டார். 

No comments:

Post a comment