Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற 32 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழி காட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, 2015-2016-ம் கல்வியாண்டில், 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ்இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் 2 மாணவியர்களுக்கு தலா 25ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.


மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 3 மாணவர்களுக்கு தலா 25ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவிக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை.

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறுவர்கள் இல்லங்களில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; வனத்துறையின் கீழ்இயங்கி வரும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் என ஆக மொத்தம் 10-ம் வகுப்பு அரசுபொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 13 மாணவ, மாணவியர்களுக்கு 3 லட்சத்து 25ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

2015-2016-ம் கல்வியாண்டில், 12-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 50ஆயிரம் ரூபாய்க் கான காசோலைகள்; பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 4 மாணவர்கள் மற்றும் 2 மாணவியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் 2 மாணவியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ்இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 3 மாணவியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை; சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறுவர்கள் இல்லங்களில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

வனத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; என ஆக மொத்தம் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 19 மாணவ, மாணவியர்களுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வழங்கினார்.

அப்போது, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்று இன்று பரிசுகள் பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, நீங்கள் தொடர்ந்து சிறப்பாக படித்து நமது மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும், உங்கள் கல்வியில் மேன்மேலும் வளர்ச்சியுற்று நீங்கள் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட மாணவ-மாணவியர்கள் தங்களை பாராட்டி காசோலைகள் வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றிய

No comments:

Post a Comment