Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மாணவர் தன்னெழுச்சி போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முழு ஆதரவு-20ந்தேதி மாலை வட்டாரத்தலைநகரில்மாணவர்களுக்கு ஆதரவாகவும் , மத்திய ,மாநில அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநில அமைப்பு முடிவு. திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வேண்டுகோள்

த மிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க தோழர்களே ! நமது இயக்க போராளி அய்யா செ.முத்துசாமி அவர்களின் அறிவுறுத்தலின் படியும் , வழிகாட்டலின் படியும் ...

📢 இன்று தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளாக காணாத , ஒரு தலைவன் இல்லாத தன்னெழுச்சி போராட்டமாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள களத்திற்கு நமது இயக்கத்தின் ஆதரவையையும் ,  தோழமையையும் வழங்க தயாராகுங்கள்.


📢 இது வெறும் ஜல்லிகட்டுக்கான போராட்டம் மட்டும் இல்லை தோழர்களே ! 
பண்பாட்டை பாதுகாக்கவும் , கலாசாரத்தை காக்கவும் ,நம் இனத்தின் இருப்பை அடையாளபடுத்துவதற்கான போராட்டம் தயாராகுங்கள் தோழர்களே ! 

📢 ஒரு பீட்டா என்கிற வெளிநாட்டு கம்பெனி ஓநாய் நம் இன அடையாளத்தையும் , நம் இயற்கை பானத்தையும் , அழிக்க நமது மத்திய ஓநாயோகளோடு கூட்டு சேர்ந்து காவிரி , விவசாயம், பொங்கல் , ஜல்லிகட்டு , கள் , இளநீர் போன்ற அனைத்து அடையாளங்களையும் அழிக்க ஆரம்பித்தவர்களை தாக்க தயாராகுங்கள் தோழர்களே ! 

📢 நாம் கற்றுக் கொடுத்த மாணவ சமுதாயம் போராடும் போது நாம் வேடிக்கை பார்பதில் அர்த்தம் இல்லை .ஆதலால் தயாராகுங்கள் தோழர்களே ! 

📢 நமது இயக்க அறிவிறுத்தலின் படி 

நாளை அனைத்து ஆசிரியர்களும் கறுப்பு பேஜ் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்

📢 மேலும் 20.01.2017 வரும் வெள்ளிகிழமை அன்று அந்தெந்த வட்டாரதலை நகரங்களில் மாணவர்களுக்கு ஆதரவாகவும் , மத்திய ,மாநில அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநில அமைப்பு மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.

📢📢📢 தயாராகுங்கள் இயக்க தோழர்களே ! 
வெளி நாட்டு ஓநாய்களிடம் இருந்து நம் இன பெருமை காக்க ஆசிரிய இனத்தின் குரல் ஓங்கி ஓலிக்கட்டும் தமிழக வீதிகளில்.....

📢 கோ.நாகராஐன்
மாநில இளைஞரணி செயலர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment