Labels

rp

Blogging Tips 2017

பிளாஸ்டிக் 'ஆதார் கார்டு' வெச்சு இருக்கீங்களா? அல்லது வாங்கப் போறீங்களா? இந்த அறிவிப்பை முதல்ல படிச்சிடுங்க

 பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட, அட்டையில் உள்ள ஆதார் அடையாள அட்டை மட்டுமே அதிகாரப்படியாக செல்லுபடியாகும்.
 பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட்கார்டுகள் மூலம் பிரின்ட் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் ஒருபோதும் செல்லாது என்று ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 ஆதார் அடையாள அட்டையை பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சடித்து தருகிறோம் என்று ரூ. 50 முதல் ரூ. 200 வரை கொடுத்து பொது மக்கள் ஏமாற வேண்டாம் அந்த வகையான கார்டுகள் ஒருபோதும் செல்லாது என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இது குறித்து ஆதார் அட்டை வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விடுத்த அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
 யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு வழங்கிய ஆதார் அட்டையில் வெட்டிக் கொள்ளக்கூடிய பகுதி எனக் கூறப்பட்டுள்ள பகுதி, அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு காகிதத்தில் பிரின்ட் செய்யப்படும் ஆதார் ஆகியவை மட்டுமே அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும்.
 ஒரு நபரிடம் பேப்பர் வடிவத்தில் ஆதார் கார்டு இருந்தால், அவர் மேற்கொண்டு லேமினேஷன் செய்யல்பட்ட அல்லது ஸ்மார்ட், அல்லது, பிளாஸ்டிக் ஆதார் கார்டுவைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 இதற்காக மக்கள் தனியாக பணம் செலுத்த வேண்டாம்.
 ஆதார் அமைப்பில், பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு என்ற ஒரு திட்டம் இல்லை.

 ஆதலால், பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளைப் பெற, பொது மக்கள் தங்களின் ஆதார் விவரங்களையும், தனிப்பட்ட விவரங்களையும் அங்கீகாரமற்ற நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டாம்.
 பொதுமக்களிடம் இருந்து அங்கீகாரமற்ற நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டைபிரின்ட் சய்து தருகிறோம் என்ற பெயரில், ஆதார் விவரங்கள், தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க கூடாது.
 அவ்வாறு விவரங்களை சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.
 பிளாக் அன்ட் வொயிட்
ஆதார் அட்டை வண்ணத்தில் தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 கருப்பு வெள்ளையில் (பிளாக் அன்ட் வொயிட்) கூட ஆதார் அட்டையை பிரின்ட் செய்து மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 அதை பிளாஸ்டிக் கார்டுகளாகவோ, அல்லது லேமினேட் செய்யவோ தேவையில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment