Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க வரலாற்று நாயகனோடு மாநில பொறுப்பாளர்களும் , சென்னை மாநகர உறுப்பினர்களும் சந்தித்த நிகழ்வு...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க வரலாற்று நாயகனோடு மாநில பொறுப்பாளர்களும் , சென்னை மாநகர உறுப்பினர்களும் இன்று சந்தித்த நிகழ்வு...      
               முதலில் மாண்புமிகு கல்வி அமைச்சரை சந்திக்க சென்ற போது , அவர் நமது அய்யாவை பார்த்தவுடன் வாங்க அண்ணா என்று அன்போடு வரவேற்று , ஏன் அண்ணா உடல் இளைத்து உள்ளீர்கள் , நலமாக இருக்கீறர்களா ? தற்போது நாமக்கல்லில் தானே இருக்கிறீர்கள் என்று அன்போடு விசாரித்து உள்ளார்.    
      
                           பிறகு  , MLC கால நிகழ்வுகளையும் இருவரும் சுகமான நினைகளோடு பகிர்ந்து கொண்டனர் .                           அதன் பிறகு நமது பொறுப்பாளர்களை பார்த்து இந்த தலைமையின் கீழ் பணிபுரிய நீங்கள் எல்லாம் பெருமைபட்டு கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்கள். 

      பிறகு கல்வி துறையில் வர கூடிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து உள்ளார்.         
 🙏 வருகிற மே மாதம் 30ந் தேதிக்குள் அனைத்து மாறுதல் , பதவி உயர்வு கவுன்சீலிங் நடத்தி முடிக்கபடும் . 

         🙏 வருகிற சூன் மாதம் 20 ந் தேதிக்குள் ஆசிரியர்களுக்கு அனைத்து Training யும் வழங்கி முடித்து விடுதல் . அதன் பிறகு கல்வி பணியும் மட்டும் தான்..
          🙏 June 1 ந் தேதி Smart Card for all Children வழங்கப்படும். 
   🙏 ஆசிரியர் தகவல் இணையதளம் உருவாக்கி அதில் அனைத்து ஆசிரியர்களின் தகவலும் பதிவு செய்து அனைவரும் பார்க்கும்படி உருவாக்கபடும்.          
     🙏 திரு . விஜயகுமார் IAS அவர்களை கல்வி ஆலோசகராக நியமிக்க அவரிடம் ஒப்புதல் கோரி உள்ளதாகவும் கூறி உள்ளார்கள் .   

                திரு. விஜயகுமார் IAS அவர்கள் நமது அய்யாவின் மீது மிகுந்த அன்பு ம் மரியுஆடையும்  கொண்டவர்.   

         அதன் பிறகு நமது அய்யா ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்சினையான , 2800 grade pay மாற்றமும் , CPS பற்றி் கோரிக்கை வைத்தார்.                                 உடனடியாக மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் அண்ணா இது குறித்து ஒவ்வொருவரும் ஒரு தகவல் சொல்கிறார்கள். ஆதலால் தாங்கள் இது குறித்து என்ன செய்யலாம் என்று கூறுங்கள் என்றார் 

         அதற்கு தீர்வாக நமது அய்யா அவர்கள்  ந்னைாவ்த்தலர் நெடுஞ்செழியன் மற்றும் தம்பித்துறை ஆகியோர் கல்வி அமைச்சராக பொறுப்பேற் றவுடன்  அனைத்து  ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து ஒரு  ஆல்கோச்ட்ம்னை மற்றும் கோரிக்கைகஆள் கேட்கும் கூட்டம் கூட்டி கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளனர் அதே போன்று அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம்   கூட்டவும் . அங்கு அவர்கள் அனைவரின் கோரிக்கையும் கலந்து முடிவு செய்யலாம் என்றார்.   
   உடனே அமைச்சர் பெரு மகான் ,இடைத்தேர்தல்,பட்ஜெட் கூட்டத்தொடர்,உள்ளாட்சித்தேர்தல் போன்ற சவால்கள் பல இருந்தாலும் தாங்கல் கூறியது போல் 20 நாட்களுக்குள் அனைத்து ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளுடன் ஓர் கலந்துரையாடல் கூட்டம்  கூட்டுகிறேன் என்றும் , அதை ஒரு நாள் முழுவதும் வைத்துக் கொள்வோம் என்றும் , அன்று மதிய உணவு விருந்தும் ஏற்பாடு செய்து விடலாம் என்று அன்போடு கூறினார் 
 என்று கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நேரம் ஓதுக்கி பேசினார்கள் . அமைச்சருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து புறப்பட்டனர்                         

No comments:

Post a Comment