rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திருச்சி மாநாடு- மத்திய ,மாநில அமைச்சர்கள் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது*அணி திரள்வீர்

05/06/2017 திங்கள்  காலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுசெயலர் திரு க.செல்வராஜு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு கே.பி.ரக்‌ஷித் ஆகிய இருவரும் தலைமைச்செயலக ம் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ .செங்கோட்டையன், தமிழக மின் துறை அமைச்சர் மாண்புமிகு பா.தங்கமணி,சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு என்.வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி ஆகியோர்களை சந்தித்து நேரில் மாநாடு அழைப்பிதழ் அளித்து மாநாட்டிற்கு அழைத்தோம். அவர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தி உள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்                        
✅மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்ராதாக்கிருஷ்ணன் அவர்கள் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது        
             
✅அணி திரட்டி ஆசிரியர்களை அழைத்து வர வட்டார ,மாவட்ட , பொருப்பாளர்கள் முயற்சி செய்யவும் -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள். மாநாட்டிற்கு அமைச்சர் பெருமக்கள் வருகை உறுதியாகி உள்ளதை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி அழைத்துவர் அயராது பாடுபடவும். மாநாடு சிறக்க அனைவரும் கண் துஞ்சாது, சோம்பலின்றி,விடாமுயற்சியோடு பாடுபடவேண்டிய தருணம் இது.                  ✅அழைப்பிதழை பள்ளி வாரியாகவோ,அல்லது ஆசிரியர்களின் வீட்டிற்கோ சென்று கொடுத்து வருகையை உறுதிப்படுத்தவும்                        
✅மாநாட்டு சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு மாவட்ட செயலர்களுக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது. உடன் பெற்றுவட்டார ,மாவட்ட தலைமை இடங்களில் ஒட்டவும் ஏற்பாடு செய்யவும்💪💪💪💪💪💪💪                        
: மாநாடு அழைப்பிதழ் கிடைக்கப்  பெறாத வட்டார செயலர்கள் உடன் மாவட்டச்செயலரை தொடர்புகொண்டு பெற்று  ஆசிரியர்களுக்கு வழங்கவும்

No comments:

Post a Comment