Labels

rp

Blogging Tips 2017

தமிழக கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் அப்பணியில் பாடதிட்டங்கள் முழுமையாக மாற்றம் செய்திடும் வரையில் தொடர அனுமதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டுகிறது-மூத்த பொதுச்செயலாளர் திரு செ.முத்துசாமி.

தமிழக கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் அப்பணியில் பாடதிட்டங்கள் முழுமையாக மாற்றம் செய்திடும் வரையில் தொடர அனுமதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டுகிறது-மூத்த பொதுச்செயலாளர் திரு செ.முத்துசாமி.
உயர் நீதிமன்றம் உத்தரவு
நேற்று மதியம் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், தமிழக மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியக்கும் குழுவில் இடம்பெற்றிருக்கும் யாரையும் இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றம்சாட்டினார்.இதைக் கேட்ட நீதிபதி, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையை அவர்தான் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பதாகவும், குழுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை செயலருக்கு வழங்கும் வகையில் அரசு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி முடியும் வரை அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மூத்த பொதுச்செயலாளர் திரு செ.முத்துசாமி.அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டு.
நேற்று மாலை அமெரிக்காவில் இருந்து தமிழக கல்வித்துறை செயலர் திரு உதயசந்திரன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு உயர்நீதிமன்றம் அளித்த இவ்வுத்திரவைனைக்கேட்டு தாம் மகிழ்ச்சி அடைந்ததாகவும்,தாங்கள் கல்வித்துறை செயலர் பதவியில் தொடர்வது ,நாமக்கல் கவிஞரின் வாரிசாக நாமக்கல் மண்ணிலிருந்து வந்து  ,தமிழக  கல்வித்துறையில் பல வியத்தகு மாற்றங்களை செயல்படுத்திவரும் தங்கள் பணி மேலும் சிறப்படையும் வகையில் ,தடைகள் எதுவரினும்முறியடித்து பணிசெய்ய இவ்வுத்தரவு வழிவகுக்குமென்றும் தெரிவித்தார் ,உயர்நீதி மன்றத்தின் இந்த ஆணையை தாமும், தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியும் மகிழ்ச்சியுடன் வறவேற்று பாராட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தின் பட்டி தொட்டியில் பணியாற்றும் கிராமப்புற ஆசிரியர்கள் முதல் தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்கள் வரை அனைவரின் மனதிலும் இவ்வுத்திரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், அளிப்பதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பாராட்டையும் வரவேற்பையும் அளித்துள்ளதாக தெரிவித்தார்,
தமிழக மாணவர்கள் வருங்காலத்தில் நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகளில் பெருமளவில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் வகையில் கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள்,ஆசிரியர்கள்,அமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய அரசின் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்திற்கு மேலான் பாடதிட்டம்  தமிழகத்தில் கொண்டு வர பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேகமான பணிகள் நடைபெற்ரு வரும் நிலையில் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் மாற்றப்பட உள்ளதாக வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் இவ்வுத்திரவு தமிழகத்தின் மாணவர்களின் ஒளிமயனான எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்களும்  நம்பிக்கையுடன் அமையும் இதனை வரவேற்று பாராட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment