Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் . அமெரிக்காவில் இருந்து கல்விச்செயலாளர் திரு.உதயச்சந்திரனை தொடர்பு கொண்டு உடனடியாக ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் மிகுந்த எழுச்சியோடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் அமெரிக்கா சென்றுள்ளதால் போராட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. அமெரிக்காவில் இருந்து கல்விச்செயலாளர் திரு.உதயச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது செ.மு. ஐயா அவர்கள் கல்விச்செயலாளரிடம்
அவரும் ஊதியக்கமிட்டியில் ஒரு உறுப்பினர் என்ற முறையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நீண்ட அனுபவமுள்ள தலைமைச்செயலாளர், செல்வாக்குள்ள கல்வி அமைச்சர் ஆகியோரிடம் எடுத்துக் கூறி உடனடியாக ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment