Labels

rp

Blogging Tips 2017

ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்கப்படும்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்கப்படும் என்றார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் செ. முத்துசாமி.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, அக்கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியது: அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி தமிழக முதல்வருக்கு அளித்த கடிதத்தின்படி, தமிழக அரசானது ரூ.10 கோடி அளித்துள்ளது.



இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் ரூ.1 கோடி திரட்டி தமிழ் இருக்கை அமைப்பதற்கு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக ஆசிரியர் கூட்டணியின் அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் ராமசாமி ரூ.5 லட்சம் அளித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.66 ஆயிரம் நிதி திரட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment