Labels

rp

Blogging Tips 2017

இயக்கத்தின் வெற்றி -ஈரோடு: பெருந்துறை வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து முயற்சி க்கு வெற்றி

 7 வது திருத்திய ஊதியக் குழு 2017ன் அரசாணை 305 , நிதித்துறை நாள் : 13.10.17ன் படி (ஆசிரியர்கள், அரசுழியர்கள் புதிய HRA பெற நமது இயக்க மாவட்டத் தலைவர் திரு.பெ.கு.பொன்னுச்சாமி அவர்கள் தலைமையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நிதித்துறை இணைச் செயலாளரிம் தொடர்ந்து விண்ணப்பித்தோடு, தொடர் முயற்சியின் காரணமாக) ஈரோடு மாநகராட்சியானது கிரேடு II நிலையிலிருந்து கிரேடு I(b) நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.

  நாளது வரை பெருந்துறை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர், அரசுழியர் அனைவரும் கிரேடு IV க்கான (கடைசி நிலை) HRA பெற்று வந்தார்கள். மேற்காண் அரசாணையின் படி ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து 16 கிமீ தொலைவில் வரும் ஒன்றியத்தின் ஏதாவது ஒரு பகுதி மூலம் அந்த ஒன்றியம் முழுவதும் ஈரோடு மாநகராட்சி HRA கிரேடு I(b) பெற தகுதி உண்டு.
 அந்த அடிப்படையில் பெருந்துறை ஒன்றியத்தில் பணிபுரியும் அனைவரும் கிரேடு I(b) HRA பெற தகுதி பெற்றவர்கள். இருந்தபோதும் போதிய சான்றுகள் இல்லாத காரணத்தால் பெருந்துறை ஒன்றிய ஆசிரியர், அரசுழியர் கிரேடு IV க்கான HRA வையே பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
 இந்நிலையில் நமது பெருந்துறை வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக  மாவட்ட நிர்வாகம் மூலம் நெடுஞ்சாலைத்துறையினரிடமிருந்து உரிய சான்று பெற்று அதனை இன்று 17.11.17 பெருந்துறை சார்நிலை கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தோம். நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் வழங்கிய சான்றை பெற்றுக் கொண்ட கருவூல அலுவலர் அவர்கள் பெருந்துறை ஒன்றியத்தில் பணிபுரியும் சுமார் 1200 க்கு மேற்பட்ட ஆசிரியர், அரசுழியர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என அனைவருக்கும் கிரேடு I(b) க்கான HRAவை அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அவர் வருங்காலங்களில் தணிக்கை தடை ஏற்படின் இச்சான்று பயன்படும் என்றும், அக்டோபர் –17 மாத நிலுவை பட்டியலிலேயே புதிய HRA I(b) யை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
 இதுவரை பெருந்துறை ஒன்றியத்தில் HRA 200 பெற்றவர்கள் 1700ம், 220 பெற்றவர்கள் 2000ம், 240 பெற்றவர்கள் 2300ம், 260 பெற்றவர்கள் 2600ம், 280 பெற்றவர்கள் 3000ம், 300 பெற்றவர்கள் 3300ம், 320 பெற்றவர்கள் 3600ம், 340 பெற்றவர்கள் 3800 ம், 360 பெற்றவர்கள் 4100ம், 380 & 400 பெற்றவர்கள் 4300ம் பெறுவார்கள்.
நன்றி: பெருந்துறை வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் .

No comments:

Post a Comment