Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு; சனிக்கிழமை முதல் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

போக்குவரத்து பேருந்துக் கட்டணங்கள் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு நாளை முதலே அமலுக்கு வருகின்றன.

போக்குவரத்து தொழிலாளர்களின்  ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்றவற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டதால் தனியார் பேருந்து கட்டணங்களும் உயர வாய்ப்புள்ளது.


எதிர்காலங்களில் எரிபொருள் மற்றும் எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை உள்ளடக்கிய அளவீட்டு குறியீட்டின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.

மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்துக் கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் 20.1.2018 அன்று நாளை (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

மாவட்டங்களில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம். (1 முதல் 20 ஸ்டேஜ் வரை) 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் 12ரூபாயிலிருந்து 19 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் உயர்த்தப்படும் கட்டணம் (1 முதல் 28 ஸ்டேஜ் வரை) 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட புறநகர் கட்டணம் குறைந்தபட்ச பயணக் கட்டணம் (ரூபாயில்)

புறநகர் தற்போதைய கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் விபரம்:

சாதாரணப் பேருந்து (10 கி.மீ) 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்வு

விரைவுப் பேருந்து (30 கி.மீ.) 17 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக உயர்வு

அதி சொகுசு இடைநில்லாப் பேருந்துகள் புறவழிச்சாலை இயக்கப் பேருந்துகள் (30 கி.மீ) 18 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக உயர்வு

அதிநவீன சொகுசு பேருந்து (30 கி.மீ) 21 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக உயர்வு

குளிர்சாதனப் பேருந்து (30 கி.மீ) 27 ரூபாயிலிருந்து 42 ரூபாயாக உயர்வு

வால்வோ பேருந்து (30 கி.மீ) 33 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக உயர்வு

மலை மேல் செல்லும் சாதாரண பேருந்து (6 கி.மீ) 4 ரூபாயிலிருந்து 6 ரூபாய் மற்றும் 20 சதவீதம் கூடுதல் கட்டணம்.

மலைமீது செல்லும் விரைவு பேருந்து (30 கி.மீ) 20 ரூபாயிலிருந்து 24 ரூபாய் மற்றும் 20 சதவீத உயர்வு.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.01.2018

No comments:

Post a Comment