Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

விடுமுறை நாளில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம்

சென்னை: விடுமுறை நாட்களான 29, 30, 31ம் தேதிகளில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:2016-17 மற்றும் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான தாமதிக்கப்பட்ட வருமான வரி கணக்கு மற்றும் 2016-17ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2018 மார்ச் 31 ஆகும். 2017-18 நிதி ஆண்டு நிறைவடையும் மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை ஆகும். வருகிற 29 மற்றும் 30 தேதிகளும் விடுமுறை நாட்களாகும். 


இருப்பினும் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யவும் அத்துடன் தொடர்புடைய பணிகளை நிறைவேற்றவும் வசதியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்களும் வருகிற மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செயல்படும். இந்த நாட்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும். வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய தேவையான உதவிகளை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment