rp

Blogging Tips 2017

1, 6, 9, 11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடக்கம்,*

*தமிழகப் பள்ளிக் கல்வித்துறை 1, 6, 9ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.1 முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டுள்ளது.*

*QR code போன்ற சிறப்பு அம்சங்களுடன் 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. விலையில்லாப் பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 1, 6, 9ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.*

*11ஆம் வகுப்புக்கான பாடநூல்கள் விற்பனை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும். 1, 6, 9ஆம் வகுப்பு பாடநூல்களை www.textbookonline.tn.nic.in என்கிற இணையதளம் மூலமும் வாங்கலாம். நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கும்.*

No comments:

Post a Comment


web stats

web stats