மக்களின் சுகாதாரத்திற்கும்,மக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விஷப்புகையை கக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்று 100 நாட்களாக மக்கள் போராடிவந்த நிலையில்,
இதுவரை மத்திய மாநில அரசுகளிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்ற கோபம்,பாதிப்பு மக்களுக்கு இருந்து வருகிறது.இந்த நியாமான கோபத்தை,பாதிப்பை தெரிவிப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை நோக்கி பல்லாயிரம் தூத்துக்குடி மக்கள் ஊர்வலமாக சென்றனர் .இந்த ஜனநாயகமான,நியாயமான போரட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை ஏவி,தடியடி,கண்ணீர்புகை,வீச்சு,தண்ணீர் பீச்சியடிப்பு என ,அதோடு நில்லாமல் பறவைகள் போல் சுட்டெரித்த இந்த தமிழக அரசின் ஈவு இரக்கமற்ற கொடூர நடவடிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக்கூட்டி தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூடுவதற்கான ஆணையை வெளியிட்டு தமிழ்நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திரு செ.முத்துசாமி Ex MLC,அவர்கள் தமிழக அரசினை கேட்டுக்கொள்கிரார்.
No comments:
Post a Comment