Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு. *இனி e.tds செய்ய வேண்டிய அவசியம் இருக்காது கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி*

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு.
*இனி e.tds செய்ய வேண்டிய அவசியம் இருக்காது கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி*
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் கருவூலத் துறை ஆணையாளர் திரு தென்காசி ஜவகர் அவர்களை மாநிலத் தலைவர் செ முத்துசாமி அவர்கள் தலைமையில் பொதுச் செயலாளர் செல்வராஜ் மாநில பொருளாளர் கே.பி.ரக்‌ஷித் ஆகியோர் கடந்த 8ம் தேதி சந்தித்து

*எவ்வாறு சேமநலநிதி சந்தா( gpf )பிடித்தம் நேரடியாக அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது அதேபோன்று ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித்துறை அவ்வப்பொழுது அவரவர் PAN கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்* என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை கவனமுடன் கேட்ட கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் *திரு தென்காசி ஜவகர்* அவர்கள்
ஊதியம் ஆன்லைனில் பெரும் வசதி மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் சரியான தருணத்தில் சரியான கோரிக்கையை *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* மட்டுமே தமிழ்நாட்டில் தன்னை சந்தித்து கோரியுள்ளதாகவும் அதற்கு தான் பெருமைப்படுவதாகவும் கூறி வியந்தார.
் மேலும் etds செய்யப்படாததால் form 16 கிடைக்காத காரணத்தினால
் தானே வருமான வரித்துறை நோட்டீஸ் பெற்று அபராதம் செலுத்தும் நிலை வந்துள்ளது என்று

நினைவுகூர்ந்து அதன் அடிப்படையில் மாநில கணக்காயர் அலுவலகம் (AG)மற்றும் வருமானவரித்துறை அலுவலகம( IT) கருவூல கணக்குத் துறை(Tresury) அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வரும் *நவம்பர் 1 தேதி முதல் மாதாந்திர ஊதியத்தில் பிடிக்கப்படும் வருமானவரி அவரவர் PAN கணக்கில் அவ்வப்போது மாதந்தோறும் வரவு வைக்கப்படும் என்று உறுதி அளித்தார் அதற்கு தேவையான மென்பொருள் தயாரிக்கப்பட்டு விட்டது என்றும் கூறினார். மேலும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் நலனில் அக்கறை கொண்டு இக்கோரிக்கையை முன்னெடுத்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் Se.mu ஐயா அவர்களுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என்றும் கடமைப்பட்டுள்ளனர் என்று புகழாரம் சூட்டினார் ஆனால் அய்யா முத்துசாமி அவர்கள் இதற்கெல்லாம் காரணம் தாங்கள் தான் என அவரைப் பாராட்டி உடனடியாக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த கேட்டுக்கொண்டார்* விரைவில் கருவூல கணக்குத்துறை நடைமுறைப்படுத்த உள்ள இந்த நடைமுறையால் இடிடிஎஸ் செய்வது இனிமேல் தேவைப்படாது மார்ச் மாதம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேரடியாக வருமான வரி படிவம் தாக்கல் செய்யலாம் என அறிய வருகிறது இது சார்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப் டும் என்றும் நமது கோரிக்கையின் மீது உடனடி பதில் எழுத்துப்பூர்வமாக ஓரிரு நாளில் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்

No comments:

Post a Comment


web stats

web stats