rp

Blogging Tips 2017

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த அ.தி.மு.க., எதிர்ப்பு -முழு விவரம்

'லோக்சபா தேர்தல் அட்டவணையின்படி, முதல் கட்டத்திலேயே, தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, இதர துறை ஊழியர்களை, தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை, தலைமை செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம், தேர்தல் கமிஷன் சார்பில், நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசியது குறித்து, அரசியல் கட்சியினர் கூறியதாவது:அ.தி.மு.க., - ஜெயராமன்: லோக்சபா தேர்தல், பல கட்டமாக நடக்கும். அதில், முதல் கட்டத்திலேயே, ஒரே நேரத்தில், தமிழகத்தில் தேர்தலை நடத்த வேண்டும். குடிநீர் உட்பட அத்தியாவசிய பணிகளை, தேர்தலை காரணம் காட்டி தடை செய்யக் கூடாது. தேர்தல் பணியில், அனைத்து தரப்பு ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும்.ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, கூட்டுறவுத் துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் போன்றோரை, தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினோம்.

No comments:

Post a Comment