rp

Blogging Tips 2017

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது


 இதனை 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதினர்

 இதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் நடைபெற்றது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) வெளியிடப்படவுள்ளன

தேர்வர்கள் www.dge1.tn.nic.in, www.dge.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
மேலும், மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிபடிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு
குறுஞ்செய்தி
மூலமாகத் தேர்வு முடிவு அனுப்பப்படும்

♦♦தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

 இதையடுத்து வரும் மே 2-ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்

6ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் இருந்தும் மாணவர்கள் தாங்களாகவே மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment