இந்த கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை முதல் வாரம் தொடங்கி வெளிவரும் அட்டவணைப்படி நடைபெற உள்ளது
. மாறுதல் விதிமுறைகளில் சென்ற ஆண்டு பதவி உயர்வில் சென்றவர்கள் உட்பட எந்த விதி தளர்வும் இடம்பெறவில்லை.
பள்ளிக்கல்வித்துறையின் பிடிவாதம் தொடர்கிறது.
ஆனால் சென்ற ஆண்டு பணியிட நிரவலில் வேறு ஒன்றியங்களுக்கு சென்றவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க வாய்ப்பு உள்ளது.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
சுமார் 300 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிரவலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள்.
தொடக்கக்கல்வித்துறை முழுப்பாதுகாப்பு உணர்வுடன் இருந்து வருவதால் இந்த எண்ணிக்கை குறைக்கப் பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது
. மாதிரிப் பள்ளி தொடங்குவதற்கு முற்றிலும் உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும்.
எல்கேஜி, யூகேஜி, முதல் வகுப்பு தொடங்குகிற போது தொடக்கக் கல்வியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்டு தான் மாற்றுப் பணியில் நியமனம் செய்ய வேண்டும்.
பணியிட மாற்றம் அல்ல.
விருப்பமில்லாதவர்களை கட்டாயமாக மாற்றுப் பணி செய்யக்கூடாது என தொடக்கக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளதை பள்ளிக் கல்வித்துறையும் முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவார்கள்.
அதுபோல் கூடுதல் பணியிடம் உள்ள பள்ளிகளில் இருந்து பணி நியமனம் செய்யலாம்.
10 மாணவர்களுக்கு குறைவான பள்ளியிலிருந்து பணி நியமனம் செய்யலாம்.
பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் இருந்து பணி நியமனம் செய்துள்ளார்கள்
. எதுவானாலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடமும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment