Labels

rp

Blogging Tips 2017

டிட்டோஜாக் கூட்டம் கூடி யதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் முத்துசாமி அவர்கள் வரவேற்பு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு உருவாவதற்கு முன்னர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அதாவது டிட்டோ ஜாக் கூடி போராட்டங்களை முன்னெடுத்தது. பின்னர் ஒருமித்த கருத்தோடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன் ஜாக்டோ என்ற பெயரில் இணைந்து போராட்டங்களை வடிவமைத்து பங்காற்றியது... அதன்பின்னர் அரசு ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ ஜியோ*என்ற பதாகையின் கீழ் போராட்டங்களை முன்னெடுத்தது அனைவரும் அறிந்ததே...
 தற்போது உள்ள சூழ்நிலையில் தொடக்கக் கல்வித் துறையை முற்றாக களைந்து அழிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகளும், அரசாணைகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள தனது செயல்பாடுகளை தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்( டிட்டோஜாக்) முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்காவில் இருந்து ஐயா முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்கங்களின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிட்டோஜாக் கூட்டப்படவேண்டும் என்றும் அதன் அவசியம் குறித்தும் கடந்த வாரம் பேசினார்.. அதன் அடிப்படையில் மாநில பொதுச் செயலாளர் திரு செல்வராசு அவர்கள் தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களைச் சார்ந்த சங்க பிரதிநிதிகளிடம் பேசி வந்தது அனைவருக்கும் தெரிந்ததே... இந்நிலையில் டிட்டோஜாக் கின் இன்றைய கூட்டம் சென்னையில் நடைபெற்றது அதில் நமது இயக்கம் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு சாந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு நமது இயக்க கருத்துக்களை தெரிவித்துள்ளார்.மீண்டும் தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நமது முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது மனமகிழ்ச்சியை தருகிறது.
 மேலும் பின்லாந்து சென்று திரும்பி வந்துள்ளதமிழக கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அவர்களை டிட்டோ ஜாக் சார்பாக அதன் பொறுப்பாளர்கள் கூடி சந்தித்து பேசவேண்டும் என்று தனது அவாவையும் தெரிவித்துள்ளார்...



மேலும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள மூன்று கட்ட போராட்டங்களில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு முழுமூச்சோடு கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் டிட்டோஜாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எந்தவிதத்திலும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்குமாறு இயக்க பொறுப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment