rp

Blogging Tips 2017

EMIS - ONE DAY TRAINING FOR COORDINTORS - VELLORE CEO PROCEEDINGS

Teacher Profile -ல் பெயரில்லாத ஆசிரியர்கள் எவ்வித கலந்தாய்விலும் கலந்து கொள்ள இயலாது - பள்ளிக் கல்வி முதன்மை செயலர்.

CM CELL REPLY:விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியர் பட்டம் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் வழங்கும் பாடத்திட்டத்திற்கு இணையாக இல்லை என்ற அரசாணையினை எதிர்த்து விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் பெற்ற தீர்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைபடுத்தி விட்டதா? என்ற கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதில்.


எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு மறுக்கும் அரசாணை ரத்து

எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவத்தினர் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு மறுக்கும் அரசாணையை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. நடப்பு கல்வி ஆண்டிலேயே சேர்க்கை வழங்க வேண்டுமென கூறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிளஸ் 2 முடித்துள்ளேன். எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை கடந்த 2018ல் எழுதினேன். தமிழகத்திலுள்ள மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தேன். எனது தந்தை இந்திய ராணுவத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதனால் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை வழங்குமாறு கூறியிருந்தேன்.

டெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்புப் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2010 ஆகஸ்ட் 23-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராகப் பணியாற்று பவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆறு பாடங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும் மேல்நிலைக் கல்வியில் வழக்கம்போல் ஆறு பாடங்கள் இருக்கும் என்றும், பாடங்களைக் குறைப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியதாக வெள்ளிக்கிழமை தகவல்பரவியது. 

IFHRMS செயல்படுத்தும் அலுவலர், பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு [ மே 2019 இம்மாத IFHRMS ஊதியப்பட்டியல் தயாரிப்பில் புதிய மாற்றம் ]

EMIS INSTRUCTIONS -10.05.2019 வீடியோ கான்பிரன்ஸ் மூலம்.வழங்கப்பட்டவை

11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

 11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியதாக தகவல்கள் தெரிவித்தன. பள்ளிக் கல்வியில்,ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது.

FLASH NEWS :- பயோமெட்ரிக் முறை விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்

1 ) EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் .எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2) பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.
3) மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.
4) EMIS மூலம் online TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை migrate செய்ய வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு.* *ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு.*


TET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.*

இன்று நடைபெற்ற வீடியோ கான்பரன்சில், மதிப்புமிகு கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் :


1 ) EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான்  அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் .எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


2) பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.


3) மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.


4) EMIS மூலம் online TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை migrate செய்ய வேண்டும்.


5) கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.


6) பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.


6) பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்.


*7) பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள்  TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு Diet மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.*


8)மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


9)10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.


10) EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து  பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேற்காணும் அறிவுரைகளை  தவறாது பின்பற்றுமாறு அனைத்து பள்ளி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுத்தேர்வுகளில் மீண்டும் வருகிறது மாற்றம் - கல்வித்துறை அதிரடி முடிவு

 பொதுத்தேர்வுகளில் மீண்டும் வருகிறது மாற்றம் - கல்வித்துறை அதிரடி முடிவு

11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் - அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை

மொத்தப்பாடங்கள் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைக்கவும் பரிந்துரை

10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் - பரிந்துரை..

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 26.05.2019 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நமது மாநில அலுவலகத்தில் நடைபெறும்.

இயக்கப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 26.05.2019 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு  சென்னையில் நமது மாநில அலுவலகத்தில் நடைபெறும். 
முக்கிய முடிவுகள் எடுத்து செயலாற்ற வேண்டுமாதலால் கண்டிப்பாக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இங்ஙனம் , 
க.செல்வராஜு, 
பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தகுதித்தேர்வு அறிமுகப்படுத்திய ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் மூன்று முறைதான் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

EMIS ONLINE TC - 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் வழியாக 13-ம் தேதி முதல் மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வித்துறை தகவல்!

EMIS ONLINE TC - 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் வழியாக 13-ம் தேதி முதல் மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வித்துறை தகவல்!
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி முதல் இணையதளம் வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
தமிழக பள்ளிக்கல்வியில் 10,12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேருவதற்காக பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு முதல் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் வழியாக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எமிஸ் இணையதள வேகம் குறைவாக இருப்பதால் ஒரே நாளில் பலர் கூடும்போது சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அதிக நேரம் பயன்படுத்தும்போது இணையதளம் முடங்கிவிடுவதால் தகவல்களை சரியாக பதிவேற்றம் செய்ய முடியவில்லை என பள்ளிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

அரசு செய்த தவறுகளுக்கு ஆசிரியர்களைப் பழிவாங்குவதா? (23/8/2010 to 16/11/2012)ல் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் TET க்கும் சம்மந்தம் இல்லை. - தீக்கதிர்

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009இல் கொண்டு வந்தது. இச்சட்டம் 23.08.2010-க்குப் பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தான் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்திட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்ட விதி முறைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் தமிழக அரசையும், அதன் பள்ளிக் கல்வித்துறையையும் சார்ந்தது என்பதை அனைவரும் அறிவர்.தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளுக்கும், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அனுமதி கொடுப்பதும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியபிறகு - அதற்கு ஒப்புதல் அளித்து அப்பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஏற்பளித்து ஊதியம் வழங்குவதும் தமிழக அரசும் அதன் கல்வித்துறையும்தான்.

EMIS - 'டிசி' வழங்குவதில் குழப்பம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி தகவல் மேலாண்மை) மூலம் ஆன்லைனில் மாற்றுச்சான்று (டிசி) வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏப்.,19 பிளஸ் 2, ஏப்.,29ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் மாணவரின் புகைப் படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.முதலில் மே 3 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பின் மே 6 முதல் எனவும் தேதி மாற்றம் செய்யப்பட்டது.