rp

Blogging Tips 2017

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன்*

*தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன்* 

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.


இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலனுக்கேற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து இருப்பதாலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளதாலும், விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.


இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலனுக்கேற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து இருப்பதாலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளதாலும், விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றார்.

விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில், பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது எச்ன்றும்


தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2018 ல் மாறுதல் பெற்று விடுவிக்கப்படாத ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு ?

டெல்லி  : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. புதிய கல்வி கொள்கை வரைவில் இந்தியை கட்டாய மொழியாக மாணவர்கள் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.  மேலும்  இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது, அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப்பட்டது புதிய கல்வி கொள்கைக்கான அறிக்கை கேட்கப்பட்டது.

EMIS News 30.05.2019 - Don't Update EMIS Teacher's profile Part-II

Don't Update EMIS Teacher's profile Part-II  Till Clear Instructions Issued by State Emis Cell.EMIS UPDATE ஆசிரியர் விவரங்களை பதிவு
செய்யும்  PART 2  தற்போது STAFF DETAILS பகுதியிலிருந்து  தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது விரைவில் ஆசிரியர் விவரங்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகும் அதுவரையில் விவரங்களை சேகரித்து வைத்துக் கொண்டு தயாராக  காத்திருப்போம்...  

*EMIS update 30.05.2019*

🌿Schools need not to do any updation in Teacher's profile *part-II* till clear instructions issued by State Emis Cell.

🌿Schools should ensure that students profiles are in the respective classes- by using *promotion* and *transfer* options, before reopening day.


🌿Schools must transfer student profiles of the students (who left the school) to common pool in order to pick by the school where the student got admitted.

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 484 பக்கங்களில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம்

LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்குதலுக்கான் அறிவரைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்

Instruction to Distribute Posters, Brouchers and QR code videos - Tamil and English medium DVDs reg...

INSPIRE AWARD APPLY JULY 31 2019 LAST DATE


மாவட்ட கல்வி அலுவலர் துணை இயக்குனராக பதவி உயர்வு

அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் திரு குணசேகரன் அய்யா அவர்கள் துணை இயக்குனராக பதவி உயர்வு( CEO Cader)பெற்றுள்ளார்.

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 484 பக்கங்களில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம்.

தீவிரவாத தாக்குதலில் மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

நக்சல், பயங்கரவாத தாக்குதலில் மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000லிருந்து ரூ.2500 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 மாணவிகளுக்கான உதவித்தொகை  ரூ.2250லிருந்து ரூ.3000ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் - தலைமைச் செயலாளர் உத்தரவு

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

*2018-2019 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் வெளியீடு* மாநில கணக்காயர் அறிக்கை

மாணவர் சேர்க்கை 30% கீழ் குறைந்தால் மூட வேண்டும்: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு

30 சதவிகிதத்திற்கு குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 247 தனியார் மற்றும் 29 அரசு நிதிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 20 சதவிகிதத்திற்கு குறைவாகவே பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகிறது. இதனால் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது வீண் செலவினம் என்று பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது.

எனவே, 2019-20ம் கல்வியாண்டு முதல் தேசிய 30% மாணவர்கள் சேர்ந்திருந்தால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களை அடுத்த கல்வி ஆண்டு முதல் மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமை போன்ற காரணங்களால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிமுறைகளின்படி, 30% குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள கல்வி நிறுவனங்களை மூடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2018-2019 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் வெளியீடு

*(GPF ACCOUNT SLIP)*
*கீழ்க்கண்ட இணையதள முகவரியில் தங்களது*
http://www.agae.tn.nic.in/onlinegpf/
*TPF/GPF எண்*
*SUFFIX (PTPF/MTPF/EDN/NEW)*
*பிறந்த தேதி.*
*உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்*

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான DTEd தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.*

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.*

*எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது.*

குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு.*

*பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் - தமிழக அரசு அறிவிப்பு.*

DTEd. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.*

*எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது.*

*குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு.*

*பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் - தமிழக அரசு அறிவிப்பு.*

பள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில், பள்ளி திறப்பு அன்று மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும் என, தலைமையாசிரியர் மற்றம் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தொடக்க கல்விதுறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3 ல் திறக்க வேண்டும்.

அதற்கு முன், பள்ளி வளாகம் துாய்மையாகவும், பாதுகாப்பானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வகுப்பறைகள் துாய்மையாக இருப்பதுடன், தண்ணீர் வசதியுடன் பயன்படுத்தக் கூடியதாக கழிப்பறைகள் இருக்க வேண்டும். அவற்றில் பழுது இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

தண்ணீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ செலவை வழங்க மறுத்த உத்தரவு ரத்து

 ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஒரு குறிப்பிட்டத் தொகை அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்தும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்களுக்கான அவசர சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவுத் தொகையை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம்.



ஆனால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, திட்டத்தில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றாலோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கும் செலவுத் தொகை வழங்கப்படுவதில்லை. எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுத் தொகையினை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். 

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், வரையறை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றதாகவும் கூறி பலருக்கு மருத்துவச் செலவுகளை அரசு வழங்க மறுத்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியத் தொகை இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவச் செலவுத் தொகையை திரும்பி வழங்க முடியாது என அரசு கூற முடியாது. இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்க மறுத்த அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், மனுதாரர்களின் இந்தக் கோரிக்கையை மாவட்ட குழுக்களுக்கு அரசு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை 30 நாள்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும். 

தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி இருந்தால், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றிருப்பர். 

ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

1 முதல் 12 வகுப்புகளுக்குமான புதிய புத்தகங்களை (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) பதிவிறக்கம் செய்ய

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை

மாணவர் - ஆசிரியர் நிர்ணயம் எமிஸில் பதிவேற்றம்; 'சீனியர்' விபரமும் சேகரிப்பு

மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் விபரம் குறித்து எமிஸில் (கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு) பதிவேற்றம் செய்யும் பணி நேற்று துவங்கியது.முதன்மை கல்வி அலுவலகத்தில் சி.இ.ஓ., சுபாஷினி தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் அமுதா, முத்தையா, இந்திராணி, மீனாவதி, சி.இ.ஓ.,யின் நேர்முக உதவியாளர் சின்னதுரை மற்றும் அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 147 பேர் பங்கேற்றனர்.அரசு பள்ளிகளில் 1.8.2018ன்படி 40:1 விகிதாசாரம் அடிப்படையில் மாணவர் - ஆசிரியர் நிர்ணயம், உபரி ஆசிரியர் விபரம், உபரி ஆசிரியரில் ஜூனியர், சீனியர் விபரம், அரசு பள்ளிக்கு சொந்தமான நிலம், கட்டடம் உள்ளிட்ட விபரங்கள் எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டன. கல்வி துறையில் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பில் முதல்முறையாக சீனியர் ஆசிரியர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. மே 30க்குள் தொடக்க பள்ளிகளின் மாணவர்- ஆசிரியர் நிர்ணய விவரமும் எமிஸில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது

DEE PROCEEDINGS - அனைத்து வகைப் பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறப்பு மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

CLICK HERE

வட்டாரக்கல்வி அலுவலர்கள் பணியிடத்திற்கு 50 சதவீதம் நேரடி நியமனம் செய்யலாம் என்பதற்கான, அரசாணை எண்: 82/ நாள் 20.5.2019. பதவி உயர்வு மூலம் 50 சதவீதம்.



உண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை ,சிறப்புநிலை அனுமதிப்பதில் காலதாமதம் கூடாது-10 நாட்களுக்குள் அனைத்து தேர்வுநிலைஅனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க கல்விசெயலர் உத்திரவு

27/05/19  மாலை நமது மாநில தலைவர் அய்யா செ.மு அவர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து பேசினார்.

 அப்போது இயக்குநர் அவர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் தலைமையில் காலை   தலைமை செயலகத்தில்  நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை கோரும் கருத்துருக்கள்  கல்வி சான்றிதழ் உண்மை தன்மை அறிந்தபின்தான் அனுமதி என  நிலுவையில் வைக்க வேண்டாம் என்றும் 10 நாட்களில் அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார். மேலும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் 10ஆண்டு/20ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை/சிறப்புநிலை வழங்கி பணப்பயன்கள் 10 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்  வாட்ஸப்பில் வாய்ச் மெசேஞ் செய்தியாக அனுப்பியுள்ளார். எனவே விரைவில் ஆசிரியர்களுக்கு உரிய ஆணைகள் கிடைக்கும்.என தெரிவித்தா

நாட்டில் அமுலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டன - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.🖕🖕

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.மாநில செயற்குழு தீர்மானங்களை வெளியிட்டுள்ள நாளிதழ்

அரசு ஊழியர் ஆசிரியர் களால் தான் தோற்றோம் என இலை கட்சி காரர்கள் பேச்சு.தினமலர் டீக்கடை பென்ச் பகுதியில் செய்தி

HOW TO MAKE TIME TABLE IN EMIS WEBSITE - VIDEO


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான இலவச மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான இலவச மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர்.

இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன.இதற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி மே 18-ல் முடிந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே இலவச மாணவர் சேர்க்கையில் பல தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள்எழுந்தன. மேலும், மாணவர்களை சேர்க்கைக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

Flash News : TNTET 2019 Exam - Hall Ticket And Exam Centre Details Published - DIRECT DOWNLOAD LINK

EMIS news...Teachers profile part II now initiated....EMIS Teacher profile part -II பூர்த்தி செய்ய நமக்கு தேவையான விவரங்களை குறித்துக் கொள்ள உதவும் படிவம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 25-05-2019 அன்றைய சென்னை மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

RTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் TNTET அவசியம் - முதல்வர் தனிப்பிரிவு பதில்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு நிகழ்வுகள்




S.MUTHUSAMY EX MLC STATE PRESIDENT TNTF PRESS MEET AT CHENNAI




சென்னை செய்தியாளர் சந்திப்பு-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள் விவரம் முழு வீடியோ இணைப்பு