Labels

rp

Blogging Tips 2017

ஊத்தங்கரை ஒன்றியம் ஊ.ஒ ந.நிலைப் பள்ளி வெப்பாலம்பட்டி பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் தலைவர் கலந்துரையாடல்


18 6 2019 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரு முத்துசாமி எக்ஸ்எம்எல் அவர்களை ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு வரவேற்றும் போது எடுத்த காட்சிகள்






DEE PROCEEDINGS-தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2019 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் கோருதல் - சார்ந்து.


அலகு மாறுதல் பெறும் ஆசிரியர்களின் முன்னுரிமை நாள் எது? - CM CELL REPY


பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி தற்போது மொபைல் ஆப் ஆக பிளே ஸ்டோரில் வெளியீடு

தனியார் பள்ளியை மிஞ்சிய அரசு தொடக்கப்பள்ளி : வகுப்பறையில் ‘ஏசி’ மாணவர்கள் ‘குஷி’

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், தொண்டி அரசு பள்ளி வகுப்பறையில் ஏசி பொருத்தி மாணவர்களை குஷிப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்ேறார் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை தனித்துவமாக காட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

 அந்தவகையில் நேற்று தொண்டி கிழக்கு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4 மற்றும் 5ம் வகுப்பு அறைகளுக்கு குளிரூட்டப்பட்ட வசதி திறப்பு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன்(தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்டசெயலாளர்) தலைமை வகித்தார்.
இனி வரும் காலங்களில் அனைத்து வகுப்பறையிலும் குளிர்சாதன வசதி செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்

அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருந்து வருவதால், வரும் காலத்தில் இவ்வாறு இந்த பிரச்னையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

+1, +2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்கள் என்பது தவறான தகவல் என என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்

ஆசிரியர்களின் மாறுதல் கலந்தாய்வு விதிமுறை பற்றிய தகவல்கள்.

இந்த கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை முதல் வாரம் தொடங்கி வெளிவரும் அட்டவணைப்படி நடைபெற உள்ளது

. மாறுதல் விதிமுறைகளில் சென்ற ஆண்டு பதவி உயர்வில் சென்றவர்கள் உட்பட எந்த விதி தளர்வும் இடம்பெறவில்லை.

 பள்ளிக்கல்வித்துறையின் பிடிவாதம் தொடர்கிறது. 

ஆனால் சென்ற ஆண்டு பணியிட நிரவலில் வேறு ஒன்றியங்களுக்கு சென்றவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க வாய்ப்பு உள்ளது.

 இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

சுமார் 300 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிரவலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். 

தொடக்கக்கல்வித்துறை முழுப்பாதுகாப்பு உணர்வுடன் இருந்து வருவதால் இந்த எண்ணிக்கை குறைக்கப் பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது

. மாதிரிப் பள்ளி தொடங்குவதற்கு முற்றிலும் உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும். 

எல்கேஜி, யூகேஜி, முதல் வகுப்பு தொடங்குகிற போது தொடக்கக் கல்வியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்டு தான் மாற்றுப் பணியில் நியமனம் செய்ய வேண்டும்.
 பணியிட மாற்றம் அல்ல. 

விருப்பமில்லாதவர்களை கட்டாயமாக மாற்றுப் பணி செய்யக்கூடாது என தொடக்கக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளதை பள்ளிக் கல்வித்துறையும் முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவார்கள்.

 அதுபோல் கூடுதல் பணியிடம் உள்ள பள்ளிகளில் இருந்து பணி நியமனம் செய்யலாம்.

 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளியிலிருந்து பணி நியமனம் செய்யலாம்.

 பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் இருந்து பணி நியமனம் செய்துள்ளார்கள்
. எதுவானாலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடமும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது

கலந்தாய்வு மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை பதவி உயர்வு வழங்கபடும்: பள்ளிக்கல்வித்துறை

கலந்தாய்வு மூலம் 1627 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கபடும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

பதவி உயர்வு பெரும் ஆசிரியர்களுக்கு தற்போது பணியாற்றும் பள்ளிகளில் காலி பணியிடம் இருந்தால் அதே பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RTE விதிப்படி ஆசிரியர் மாணவர் விகிதம்

TN ATTENDANCE APP-ல் ஆசிரியர் வருகையை பதிவிடுவது எவ்வாறு-வீடியோ


RTI- ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள அந்தரங்க விவரங்கள் தவிர்த்து பதவி உயர்வு, பணியிட மாறுதல், ஊதியம் முதலிய விவரங்களை மனுதாரருக்கு எழுத்து பூர்வமாக பதிலாக அளிக்கலாமா ? தமிழ்நாடு தகவல் ஆணையரின் விளக்க கடிதம்

*வரும் 01/08/2019 முதல் புதிய IFHRMS மென்பொருள் மூலமாக மட்டுமே சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதுவரை பயன்பாட்டில் உள்ள ATBPS மற்றும் WEB PAYROLL SYSTEM மூலமான பட்டியல்கள் ஏற்கப்பட மாட்டாது. கருவூலத் துறை ஆணையர் உத்தரவு !!!.

மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க CEO உத்தரவு

பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், 4,040 மேல்நிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்துள்ளது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேட்டில் தங்கது வருகையை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் காலதாமதமாக வருவது குறைந்துள்ளது. மேலும் ஆதாரில் உள்ள முழுவிவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள், இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும் தனி சாப்ட்வேரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே தலைநகர் சென்னையில் இருந்தபடியே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் வருகை பதிவேட்டு விவரங்களை கண்காணிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலமாக 50 லட்சம் மாணவர்கள் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

சத்துணவு மையங்களில் சமையல் செய்யும் பணியாளர்கள் தூய்மையான முறையில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

 மேலும் உணவை திறந்து வைப்பதால் சில நேரங்களில் பல்லி, பூச்சி போன்றவை விழுந்து விடுகிறது.

 இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. எனவே, மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

 இதையடுத்து தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில், சத்துணவு பணியாளர்களுக்கு துண்டு, சோப்பு, நகவெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது. தினமும் கைகளை சுத்தம் செய்து நகங்களை வெட்டிக்கொண்டு பின்னர் சமையல் செய்ய உத்தரவிடப்பட்டது.
 இந்நிலையில், சத்துணவு உண்ணும் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு சமையல் செய்யும் பணியாளர்கள், தூய்மையான முறையில் உணவு சமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சமையல் பொருட்களை முன்வரிசையில் அடுக்கி வைத்து, புதிதாக வரும் பொருட்களை பின்னால் வைத்து பயன்படுத்த வேண்டும்.

பள்ளிகளுக்கு குடிநீர் வாங்குவதற்கு பெற்றோர்}ஆசிரியர் கழக நிதி: செங்கோட்டையன் தகவல்

சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பள்ளிகளில் குடிநீர் வாங்குவதற்கு பெற்றோர்} ஆசிரியர் கழகத்தில் உள்ள நிதியைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:புதிய பாடதிட்டம், மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து தேர்வுக்கும் விடை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்தஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வில் இருந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டாலும் அவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7,500 பேர் அதிகமாக உள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை
முதல்  அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும் என  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி அருகே உள்ள நம்பியூரில் மாணவர்களுக்கு இலவச ேலப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:தமிழகத்தில் எந்த பள்ளியிலும் குடிநீர் பற்றாக்குறை இல்லை.
குடிநீர் தட்டுப்பாடு என்ற தகவல் இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை. அதுபோன்ற நிலை குறித்து தகவல் வந்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல்  அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும். காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளிக்கு இன்று விடுமுறைதினம் என்பதால்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது.தண்ணீர் பற்றாக்குறையால் இல்லை.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

4TH STD ALL SUBJECT TM LESSON PLAN JUNE 3RD WEEK

5 TH STD TAMIL MEDIUM ALL SUBJECT LESSON PLAN

அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்வதை முறையாகச் செயல்படுத்தும் நோக்கில், தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில அளவில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்துவதுடன், கல்வித் தரத்தையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன், முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசுப் பள்ளிகளையும் தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.