Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் மாநில தலைவர் ஐயா அவர்கள் தலைமையில் தமிழக அரசின் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு சி பொன்னையன் அவர்களை சந்தித்த நிகழ்வு

17 3 2020  செவ்வாய் காலை 11 30 மணியளவில் மாநில தலைவர் ஐயா செ முத்துசாமி EX MLC  அவர்கள் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் (பொறுப்பு )திரு சு.மா பாலகிருஷ்ணன் மாநில பொருளாளர்  திரு கே.பி ரக்ஷித் ,மாநில துணை பொதுச் செயலாளர் திரு க சாந்தகுமார் ஆகியோர் சென்னை எழிலகம் ஆறாவது மாடியில் உள்ள திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவலகத்தில் தமிழக அரசின் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு சி பொன்னையன் அவர்களை சந்தித்தோம் 
        திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு சி பொன்னையன்  அனைவரையும் வரவேற்று அமர வைத்தார்  மாநிலத்தலைவர் அவர்கள் ஒவ்வொருவரையும்  அறிமுகம் செய்து வைத்தார் . திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு சி பொன்னையன் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார் 
          தலைவர் முத்துசாமி அவர்கள் திரு சி.பொன்னையன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தபோது கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஏழு கணவன் மனைவி ஜோடி ஆசிரியர்களை கமிஷனர் திசைக்கு ஒருவராக பிரித்து மாறுதல் அளித்ததை அவரிடம் கொண்டு சென்றவுடன் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு பரமசிவம் அவர்களுக்கு போன் செய்து திரு முத்துசாமி அவர்கள் கொண்டுவரும் கோரிக்கையை உடனே நிறைவேற்றி தரக்கூறியதையும் , அதன்படி  இயக்குனர் அந்த ஏழு ஜோடி கணவன்-மனைவி ஆசிரியர்களை ஒருசேர  மாறுதல் செய்து  அவர்கள் பழைய நிலை திரும்ப உதவியதை நினைவுகூர்ந்தார் .
       உடன் 40 ஆண்டு காலத்திற்கு முன் நிகழ்ந்த நிகழ்வு இன்னும் நினைவில் உள்ளது எனக் கூறி மகிழ்ந்தார் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு சி பொன்னையன் அவர்கள் .
         பின்னர் மாநில பொறுப்பாளர்களைப் பார்த்து உங்கள் தலைவர் முத்துசாமி எதனையும் அளந்து பேசுபவர். ஆழ்ந்து பேசுபவர் .அதிகம் பேசாதவர்  கடுஞ்சொல் கூறாதவர் எனக்கூறி இவர் என்றும் “இன்சொலன் ” செயல் வீரர் என கூறி மகிழ்ந்தார்.
பின்னர் தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக வாழ்த்து மடல் அளிக்கப்பட்டது படித்து மகிழ்ந்து நன்றி கூறினார் .
         தமிழக அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தமை காவிரி டெல்டா    மாவட்டங்களை  வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தமை ஆகியதிட்டங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, பெற்று படித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
                      மேலும் தமிழக நலன் வேண்டி  விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற வறட்சி மாவட்டங்கள் பயன்பெற  கேரள பகுதியில் அச்சன்கோவில் பம்பா ஆற்றுப்பகுதிகளில் பகுதியில் ஓடும் ஆற்று நீர் 2210 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுவதை,அச்சன்கோவில் பகுதிக்கு முன்பாக டனல் அமைத்து காவிரியுடன் இணைத்தால் அதன் மூலம் வீணாகும் 2210 டி எம் சி நீரில்  200 டிஎம்சி தண்ணீர் பெற்றாலே தமிழகம் தண்ணீர் தேவை நிறைவேறும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்னும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை ஆலோசனையாக கோரிக்கை மனு தரப்பட்டது .
          
.          மேலும் கோதாவரி கிருஷ்ணா வடபெண்ணை ஆறுகள் வழியாக காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என கூறினார் .
                          மத்திய அரசின் திட்டம் கல்லணையில் இணைப்பது என்பதாகும் ஆனால் நமது முதல்வர் அதனை மாயனூர் தடுப்பணையில் இணைத்தால் தான் திருநெல்வேலி புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பயன் பெரும்என்பதனை  உணர்ந்து அதில்   திருத்தம் கோரிள்ளார் . காவிரி உபரி நீர் புதுக்கோட்டை வழியாக திருநெல்வேலி தூத்துக்குடி வறட்சிப் பகுதியாக செல்லும்போது எல்லா குளங்களும் நிறைக்கப்படும் அதனால் நிலத்தடி நீர் உயரும் என கூறினார் முதல்வரின் இந்த நடவடிக்கை மனதார நாம் பாராட்டுகிறோம் என்று தெரிவித்தோம்.
           மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ள கர்நாடகத்தின் வட பகுதியில் மலப்பிரபா கட்டப்பிரபா நதிகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து தான் கிருஷ்ணா துங்கபத்திராநதிகள் உற்பத்தி ஆகிறது . அப்பகுதிக்கு தெற்காக சிறிதும் பெரிதுமான 13 நதிகள் உற்பத்தியாகி ஒன்றுசேர்ந்து சுமார் 2400 டிஎம்சி நீர் மேற்கே அரபிக்கடலில் மங்களூரு வழியாக பாசனம் ஏதுமின்றி சென்று கடலில் வீணாக கலக்கிறது.
     அந்த நீரை அங்கே ஒரு இடத்தில் சேகரிக்கும் விதமாக குளம் அமைத்து சேகரித்து கிழக்கு முகமாக திரும்பும்பொழுது ஆந்திராவுக்கு 500 டிஎம்சி தண்ணீரும், கர்நாடக வறட்சி பகுதிக்கு 400 டிஎம்சி தண்ணீரும், தமிழகத்திற்கு 250 டிஎம்சி தண்ணீர் பெற முடியும்.  இதனை சம்மந்தப்பட்ட  மாநில அரசுகளான தமிழ்நாடு ,ஆந்திரா மற்றும் கர்நாடக அரசுகல் மத்திய அரசுடன் கலந்து பேசி இத்திட்டத்தை நிறைவேற்றும் நிலையில் இந்தியாவின் தென் பகுதி மாநிலங்கள் மிகச் செழிப்பாக வளரும் என தெரிவிக்கப்பட்டது தமிழக அரசின் திட்ட கமிஷனின் சார்பாக  இத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசினை  வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
             திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அதனைப் படித்துப் பார்த்து கூர்ந்து ஆய்வு செய்து ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர் நலன் சார்ந்த விஷயங்களை கேட்டு வரும்பொழுது தாங்கள் விவசாயிகள் பொதுமக்கள் நலன் குறித்து கோரிக்கை மனு அளிப்பது வியப்பாக பெரும் வியப்பாக உள்ளது என்றும் இது பற்றி ஆய்வு செய்த குறிப்புகள் பெற்று திட்டம் நிறைவேற்ற முதல்வருடன் கலந்து பேசுவதாக உறுதி அளித்தார் மேலும் நீர்ப்பாசனம் குறித்து ஆய்வு செய்யும் முன்னாள் வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் .கே சிவனப்பன்  அவர்களுடன் ஆலோசனை பெறுவதாக கூறினார்


            கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரிக்கை.
          2003 இல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் நடந்தது அப்போதைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடுஞ்சினம் கொண்டு ஒரே நாளில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் அரசுஊழியர் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்தார். அதனுடன் பலர் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளானார்கள். அதன்பின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தனர். அப்போது சங்கங்களின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் சலுகைகளும் பறிக்கப்பட்டன. அதன்பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அம்மா தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது.அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது  கொடுஞ்சினம் கொண்ட அம்மா அவர்கள் கடிதோச்சி மெல்ல எறிக என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க யாரும் கோரிக்கை வைக்காமலேயே எல்லா சங்கங்களையும் மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் எனக்கூறி அனைத்து சங்க தலைவர்களையும் 3 நிமிடங்கள் பேச அனுமதி அளித்து  பேச அழைத்தார். நான் 11 நிமிடங்கள் எந்த வித தடையுமின்றி பேசியது நினைவில் உள்ளது. அதன்பின் அன்று மாலையே பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கியதுடன் ரத்து செய்யப்பட்ட சங்கங்களின் அங்கீகாரங்களை திரும்பி வழங்கினார் அதன்பின் அவர் மீதான மதிப்பு தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் உயர்ந்தது 

          அதுபோல கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தற்போதைய முதல்வர் எடப்பாடி அரசு 17பி குற்ற குறிப்பானை கைது வழக்கு பதிந்து நடவடிக்கை பணி மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்க்கப்படாமல் உள்ளது
             முந்தைய காலம் போன்று நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் 39 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்பொழுதும் இழந்துள்ளது .எனவே அம்மா வழியில் ஆட்சி செய்யும் முதல்வர் எடப்பாடி அவர்கள் அதேபோன்று அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி  17b குறிப்பாணை, வழக்குப் பதிவு, ஆயிரத்து ஐநூறு பேரின் மாறுதல்கள் ரத்து ஆகிய பாதிப்புகளை முற்றாக ரத்து செய்தால் முதல்வரின் மீதான மதிப்பு உயரும் என கேட்டுக்கொண்டார்.
           பொறுமையுடன் கேட்ட திரு சி.பொன்னையன் அவர்கள் இக் கோரிக்கையை உடனே எழுத்துப்பூர்வமாக தங்கள் சங்கத்தின் லெட்டர் பேடில் கொடுக்குமாறும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதாக உறுதியளித்தார்.
            இது நிறைவேற்றப்பட்டால் எங்கள் கட்சிக்கும் அரசுக்கும் ஆட்சிக்கும் நல்ல பெயர்தான் என்பதால் இது உங்கள் கோரிக்கை அல்ல எங்களுக்கு நாங்களே நன்மை செய்து கொள்ளும் கோரிக்கை என ஆதரித்தார் எனவே உடன் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று இதனை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார் நாம் மனமகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தோம்


 அமெரிக்க வாழ் தமிழர்களால் ஒன்பது ஆண்டுகாலம் உழைத்து வெளியிடப்பட்ட தமிழ் மறை திருக்குறள் மற்றும் தமிழ் பண்பாட்டு கையேடு என்ற புத்தகத்தை அனைத்து நகர மாவட்ட கல்லூரி பள்ளி நூலகங்களில் வைக்க கோருதல் சார்பு

           அமெரிக்க வாழ் தமிழர்களால் 9 ஆண்டுகள் உழைத்து பைபிள் போன்று தயாரிக்கப்பட்ட தமிழ் மறை திருக்குறள் மற்றும் தமிழ் பண்பாட்டு கையேடு புத்தகத்தின் பெருமையை எடுத்துக் கூறி அதனை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று தமிழக முதல்வர் கல்வி அமைச்சர் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் ஆகியோரின் அணிந்துரைகள் அவரவர் படங்களுடன்  வெளியிட்டு அதனை தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து வகை நூலகங்களிலும் கல்லூரி பள்ளி நூலகங்களிலும் வைக்க வேண்டும் என்றும்,, அவ்வாறு செய்தால் தமிழுக்கு இவ்வரசும் முதல்வரும் அழியாத தொண்டு செய்யும் வாய்ப்பைப் பெறுவர். எக்காலத்திலும் தமிழகத்தின் வரலாற்றில்  முதல்வரின் புகழ் மறையாது என்றும் கூறி அதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டும் என நமது மாநிலத்தலைவர் ஐயா முத்துசாமி அவர்கள் கேட்டுக்கொண்டார்     
               அவசியம் இதனை முதல்வரின் கவனத்திர்கு கொண்டு சென்ரு கலந்து பேசி செய்வதாக உறுதி அளித்தார் விடைபெறும்போது வாசல்வரை வந்து தானே கதவினை திறந்து வணக்கம் கூறி நமது தலைவர் ஐயா முத்துசாமி அவர்களை அவர் வழியனுப்பிதைக் கண்டு நாம் வியந்து போனோம். அவரது மாண்பும் நமது ஐயாவின் பெருமையும் நொடியில் வெளிப்பட்ட உன்னத தருணம் அது என்றால் மிகையல்ல
வெளியீடு
கே.பி.ரக்ஷித்
மாநில பொருளாளர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment


web stats

web stats