Labels

rp

Blogging Tips 2017

cps missing credits பற்றிய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்


ஓய்வறியா சூரியன் அய்யா செ.மு அவர்களின் வழிகாட்டுதலின் படி cps missing credit சம்பந்தமாகவும் ஒரு ஆசிரியருக்கு இரண்டு cps number போன்ற பிரச்சினைகள் குறித்தும் ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாகவும் தகவல் தொகுப்பு விபர மையத்திற்கு ( DATA CENTRE ,KOTTURPORAM CHENNAI) மாநில பொருளாளர் திரு K.P ரக்ஷித் அவர்களும் மாநில பொதுச் செயலாளர் (பொ)திரு சு.ம.பாலகிருஷ்ணன் அவர்களும் மாநில துணை பொதுச்செயலாளர் திருபொன் நாகேஷ் அவர்களும் 26.02.2020 மாலை 3.30 மணியளவில் சென்று இரண்டாம் தளம் எச் செக்க்ஷன் அலுவலரிடம் இது சம்பந்தமாக பேசினார்கள்.
 1 வேறு ஒன்றியத்தில் பணியாற்றிய காலத்தில் உள்ள cps missing credit  ஐ எவ்வாறு பதிவேற்றம் செய்து முடிப்பது.?


ஆசிரியர் எங்கு பணியாற்றினாரோ அந்த அந்த அலுவலகம் சென்று அந்தந்த (BEO ) அலுவலகத்திற்கு என உள்ள பாஸ்வேர்டு மூலம் cps missing credit ஐ ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் .வேறு ஒரு இடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது பணியாற்றும் இடத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய இயலாது.என தகவல் தெரிவித்தனர்.

2. ஒரு ஆசிரியருக்கு இரண்டு cps நம்பர்கள் ஒதுக்கப்பட்டு அவை இரண்டும் தற்போதும் நடைமுறையில் தொடர்ந்தால் அதனை எவ்வாறு ஒன்றாக MERGE செய்வது?

இரண்டு எண்கள் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால் தற்போது நடைமுறையில் உள்ளதை வைத்துக்கொண்டு அதனுடன் பழையதை MERGE செய்ய வேண்டும் . ஒரு cps நம்பரில் தொடரவேண்டும் எனில்தற்போதைய  DDO மூலம் அந்தந்த மாவட்ட தலைமை கருவூலம் வழியாக விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள் .
 நாங்கள் அதுபோலவே  பல தடவை மாவட்ட கருவூலத்தின் மூலம் இருந்து தங்கள் அலுவலகத்திற்கு. அனுப்பியும் நீங்கள் சரி செய்யவில்லை என்றுகூறினோம்
 அதற்கு அவர்கள் இரண்டு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள் cps missing credit ஆன்லைனில் ஏற்றுவது போல. இரண்டு சிபிஎஸ் நம்பரில் தொடரும் ஆசிரியர்களும் ஒரு cps நம்பர் கணக்கை முடித்து இரண்டையும் ஒன்றாக்கி ஒரு நம்பரில் உங்கள் அலுவலகம் மூலமே ஆன்லைனில் ஏற்றும் வசதியை விரைவில் கொண்டு வர இருக்கிறோம் விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்கள் .


3.பிறந்த நாள், பணியில் சேர்ந்த நாள், பெயர்,தலைப்பெழுத்து ஆகியன வற்றில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எவ்வாறு ?

பிறந்த நாள், பணியில் சேர்ந்த நாள், பெயர்,தலைப்பெழுத்து ஆகியன வற்றில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனில் பணிப்பதிவேடு முதல் பக்க நகல்,பணியில் சேர்ந்த நாள் பதிவு உள்ள அக்க நகல் ஆகியனவற்றை வட்டாரகல்வி அலுவலர்/பணம்பெற்று வழங்கும் அலுவலர் மேலொப்பத்துடன் விண்ணப்பம் அனுப்பப்பட்டால் திருத்தப்படும் என தெரிவித்தனர்.


நன்றி கூறி விடை பெற்றோம்.

தகவல் சு.ம பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர்( பொ) தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி

No comments:

Post a Comment