கடந்த இரு நாட்களாக அவசரம் அவசரமாக வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கிராமப்புறங்களில் இயங்கும் 25 மற்றும் அதற்கு குறைவான எண்ணிக்கையை கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் விதத்தில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்.
தமிழகமே ஏன் இந்தியாவே அதற்கும் மேலாக உலக வல்லரசு நாடுகளும் corona எனும் மிக கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு உலக இயல்பான இயக்கமே நின்று விட்ட நிலையில்,
அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,அவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்ற இந்த தருணத்தில் ,
தமிழக அரசானது கிராமப்புற பகுதியில் உள்ள ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு ஒரே ஆதாரமாய் விளங்கும் அரசுப் பள்ளிகளை மூடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாக 25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் கோரப்பட்டு உள்ளதாக அறிகிறோம் .
இக்கட்டான சூழ்நிலையில் கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களோடு அவர்களின் பொருளாதாரமும்,வருமானமும் அடியோடு பாதிக்கப்பட்டு இருப்பதாலும்,
மேலும் அவர்கள் இப்பாதிப்பில் இருந்து வெளிவர ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் அவர்களுக்கு பிடிக்கும் என்பதாலும்
தற்போது வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ள ஏழை எளிய மக்களின் கல்வி பெறும் உரிமையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை அரசாங்கம் தற்போது கையில் எடுத்திருப்பது வேடிக்கையாகவும் அதே சமயத்தில் வேதனையாகவும் உள்ளது
எனவே இந்த நிகழ்வினை தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் கவனத்தில் கொண்டு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது
*செ. முத்துசாமி Ex MLC*
மாநில தலைவர் *சு.ம.பாலகிருஷ்ணன்* மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு)
*கேபி ரக்ஷித்*
மாநில பொருளாளர்.
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.*
No comments:
Post a comment