Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
தொடர் விடுமுறைக்குப்பின் பள்ளிகளை எப்போது திறப்பது? மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை!
அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரி யால் ஆலோசனை மேற்கொண்டார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளின் வகுப்புகள், தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் உட்பட அனைத்து கல்விப்பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கல்வி ஆண்டு தாமதம் தொடர்பாக உயர்கல்வி நிறு வனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைகள் வழங்கியுள்ளது. அதில், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை கல்லூரி கள் செப்டம்பரில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது.இதற்கான ஆலோசனைக் கூட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சீனாவில் முன்னெச்சரிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா நோய் தொற்று குறைந்திருக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கைகளுடன் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. என்ன நோய் என்ற கண்டுபிடிக்கவே சுமார் 15 நாட்களுக்கு மேல் ஆனது. அதற்குள் கொத்துக்கொத்தாக பல உயிர்களை கொரோனா பறித்தது.
சீனாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு


கொரோனாவை சீனா எப்படி கட்டுப்படுத்தியது?
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.
கொரோனா இன்று உலகையே முழுவதும் முடக்கியுள்ள நிலையில் பள்ளி , கல்லூரிகளும் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிய நிலையில் தொடர்கிறது.மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதன் பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.
அதில், பள்ளி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவர் என்றும், பள்ளிகள் திறக்கும் போது மாணவ, மாணவியர்களுக்கு ஷூ, சாக்ஸ், பாடப்புத்தகங்கள் தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதில், பள்ளி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவர் என்றும், பள்ளிகள் திறக்கும் போது மாணவ, மாணவியர்களுக்கு ஷூ, சாக்ஸ், பாடப்புத்தகங்கள் தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்ட வட்டம்
நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் திருத்த சட்ட மசோதா கடந்த 2017-2018ம் ஆண்டு கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மருத்துவ கல்வி மற்றும் அதன் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று சொல்லப்பட்டாலும் நீட் தேர்வுக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்
மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் - தலைவர்களின் எதிர்ப்பும், அரசின் விளக்கமும்
மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது
காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு 2018 பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து காவிரி ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு என இரண்டாக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதில், மத்திய அரசு கூட தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் முழு அதிகாரமும் அதன் தலைவருக்கே உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஜல்சக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்.காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல்.இதுதொடர்பாக வெளியிட்ட அரசிதழை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில் மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும்.எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மத்திய நீர்வளத்துறை அமைச்சகமான ஜல்சக்தித் துறை, காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய பாஜக அரசு பறித்துவிட்டது.நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்துத் தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசின் முதல் நடவடிக்கையாக காவிரி மேலாண்மை ஆணையம் ஒழித்துக்கட்டப்பட்டு இருக்கின்றது.காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தித் துறையில் இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.கரோனா பேரிடர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் துயரங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்கும் பாஜக அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டுகிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு அலுவலகமாக இணைத்து இருப்பது தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையை நிரந்தரமாக பறித்துக்கொள்ளும் பாஜக மத்திய அரசின் துரோகச் செயலாகும்.
தமிழ்நாடு மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக மத்திய அரசின் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
ஓர் அமைச்சகத்தின் கீழ் காவிரி நதி நீர்ப்பகிர்வு விவகாரத்தைக் கொண்டுபோவது, இந்தப் பிரச்னையைத் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். எனவே மத்திய அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு இதைச் செய்வதற்கு தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும் உரிய அழுத்தங்களைத் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
பொதுப்பணித்துறை விளக்கம்
இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி துறையின் கீழ், மத்திய அரசு கொண்டு வந்ததால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜல்சக்தி ஆணையத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்தது ஒரு நிர்வாக நடவடிக்கை ஆகும். காவிரி நீர் ஆணையம் முறைப்படுத்தும் குழு நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது என விளக்கம் அளித்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ; பள்ளி கல்வித்துறை ஆலோசனை
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை, அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்குவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.அதேநேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில், அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் வாயிலாக, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணியை துவங்க, தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவப்பு
மண்டலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, இப்பணி வழங்குவதையும்; அப்பகுதிகளில், விடைத்தாள் திருத்தும் மையம் துவங்குவதையும் நிறுத்தி வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்றி, அமர்ந்திருக்க வேண்டும்; வீட்டில் இருந்து, விடை திருத்தும் மையத்துக்கு வந்து செல்ல, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக, அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும்.விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும், பின்னரும், சோப் அல்லது கிருமி நாசினியால், ஆசிரியர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்; அதற்கான வசதிகள், மையத்தில் செய்யப்பட வேண்டும் என, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிகல்வித்துறை புது வகையில் ஆலோசனை?
பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடங்கள் இல்லாமல், முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து, பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் மட்டும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தேர்வை ரத்து செய்யுமாறு, கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வை ரத்து செய்யாமல், ஜூன் மாதம் நடத்தலாம் என, கூறியுள்ளனர்
தற்போதைய சூழலில், அனைத்து மாநிலங்களிலும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற மத்திய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் நடத்தா விட்டால், மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.மேலும், ஒன்பதாம் வகுப்பு வரை, தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட உள்ளதால், பல மாணவர்களால், 10ம் வகுப்புக்கு வரும்போது கூட, தாய்மொழியில் எழுதப் படிக்க தெரியாத நிலை ஏற்படும்.
எனவே, தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், மொழி பாடங்களை விட்டு விட்டு, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்றும், கேள்விகளை குறைத்தோ, பாடங்களை குறைத்தோ நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமா? மத்திய மந்திரி விளக்கம்
- அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமா? மத்திய மந்திரி விளக்கம்அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமா?
- ஓய்வூதியத்தை 30 சதவீதம் குறைக்கவும், 80 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தவும் மத்திய அரசு திட்டமா?
- மத்திய மந்திரி விளக்கம்
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் நிதி தேவைக்காக, மத்திய அரசு, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. எம்.பி.க்கள் சம்பளத்தை குறைத்துள்ளது. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 50 ஆக குறைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
மத்திய மந்திரி விளக்கம்
இந்நிலையில், இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது:-கடந்த சில நாட்களாக, சில உள்நோக்கம் கொண்ட சக்திகள், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. சம்பந்தப்பட்டவர்களின் மனதில் குழப்பம் எழுவதை தவிர்ப்பதற்காக, அதற்கு உரிய மறுப்பு தெரிவித்து வருகிறோம்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை. கொரோனா வைரஸ் சவால் உருவெடுத்ததில் இருந்தே அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதற்குத்தான் மத்திய அரசும், மத்திய பணியாளர் நலத்துறையும் முடிவுகள் எடுத்து வருகின்றன.
கொரோனா வைரசால் நாடு தவிக்கும்போது, கொரோனாவை கையாளும் நடவடிக்கைக்காக பிரதமர் மோடியை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டும்போது, சிலர் மத்திய அரசின் செயல்களை சிறுமைப்படுத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது.
இதுபோலவே, ஓய்வூதியத்தை 30 சதவீதம் குறைக்கவும், 80 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பொய்ச்செய்தி பரப்பப்பட்டது.ஆனால், உண்மை என்னவென்றால், கடந்த மாதம் 31-ந் தேதி, ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவருக்கும் ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
பேஸ்புக்கில் இனி 50 பேர் வரை வீடியோ சாட் செய்யலாம்
ஜூம் செயலிக்கு போட்டியாக, காலவரை எதுவுமின்றி 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாட கூடிய வகையில், 'மெசஞ்சர் ரூம்ஸ்' என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள் கடந்த 2 மாதங்களாக அதிகளவில் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்பு செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜூம் செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்ததால் கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதித்திருந்தன. இந்நிலையில், ஜூம் செயலிக்கு மாற்றாக பேஸ்புக் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது ?பேஸ்புக் பயனர்கள் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் ஆப் மூலம் யாரை வேண்டுமானாலும் 50 பேர் வரை வீடியோ அழைப்பில் இணைத்து கொள்ள முடியும்.
வீடியோ அழைப்பிற்கு என குறிப்பிட்ட கால வரையறையும் எதுவும் இல்லை. பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவரும் வீடியோ அழைப்பில் இணையலாம். உலகளவில் புதிய வசதி செயல்பாட்டுக்கு வரும் முன், இந்த வாரத்தில் சில நாடுகளில் மெசஞ்சர் ரூம்ஸ் வசதி பயன்பாட்டுக்கு வருமென பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே சமூகவலைதளமான பேஸ்புக் தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால் தற்போதைய புதிய வீடியோ அழைப்பு வசதி மிக கவனமாகவும், கடந்த காலங்களில் கற்ற பாடங்களின் அடிப்படையில் முயற்சி செய்திருப்பதாக மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.இருமடங்கான வீடியோ அழைப்புகள்:நாளொன்றுக்கு 70 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் வீடியோ அழைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடியோ அழைப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது என பேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் பிரைவசி பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது ரூம் கணக்கை யார் பார்வையிடலாம் என்பதை லாக், அன்லாக் என இரண்டு வாய்ப்புகள் மூலம் நீங்களே கட்டுப்படுத்த இயலும். ஒருவேளை அன்லாக்கில் இருந்தால், வீடியோ அழைப்பு லிங்க் மூலம் யார் வேண்டுமானாலும் இணைவதோடு, மற்றவர்களுடன் பகிர முடியும்.மெசஞ்சர் ரூமை உருவாக்குபவரே வீடியோ அழைப்பை துவங்க முடியும். அவர்கள் யார் இணையலாம் என்பதை கட்டுப்படுத்துவதுடன், எந்த நேரத்தில் வேண்டுமானால் பங்கேற்பவரை நீக்க முடியும்.
மேலும் பேஸ்புக் விதிகளை மீறுவோர் குறித்து புகார் அளிக்க முடியும். அதில் எந்த வீடியோ அல்லது ஆடியோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் பேஸ்புக் புகார்களை கேட்காது எனவும் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை உருவாக்குவதற்கான வழியை சேர்க்க திட்டமிட்டுள்ளது. போன் அல்லது கணினி மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியில் இணையலாம். எதையும் தரவிறக்கம் செய்ய தேவையில்லை எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் கல்லூரிகளை திறக்கலாம் - UGC பரிந்துரை!
உள்ளன. கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக துணைவேந்தர் குகாத் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் குழு தனது அறிக்கையில் கல்லூரிகளை செப்டம்பர் மாதம் திறக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஏற்ப முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தல்.
பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஏற்ப முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தல்.
Subscribe to:
Posts (Atom)