Labels

rp

Blogging Tips 2017

பள்ளி ஆசிரியர்கள் உ யர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன? vikatan

'படிப்பதற்கும் அனுமதி வாங்க வேண்டுமா, அப்படி அனுமதி வாங்கிடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயுமா...' என்ற அதிர்ச்சிக் கேள்விகள் சாமான்யனின் மனதில் அலையடிக்கின்றன.பள்ளிக் கல்வித் துறை'உரிய அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை' என்ற தொடக்கக் கல்வித்துறையின் அறிவிப்பு, அதிர வைத்திருக்கிறது.

தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகின்றன. உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியில் சேர்ந்த பிறகு மேற்படிப்பில் பட்டம் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். முறையாக முன் அனுமதி பெற்று பட்டம் வாங்கிய ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான ஊக்க ஊதியமும் அவர்களது சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இப்படியான அனுமதி பெறாமல், பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கே தற்போது தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி மாணவிகள் (மாதிரி படம்)
இதுகுறித்துப் பேசுகிற 'தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி'யின் பொதுச் செயலாளர் ச.மயில், ''தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த பிறகு பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர் கல்வி படிப்பதற்குத் துறை சார்ந்து அனுமதி பெற வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்தான் இந்த முன் அனுமதியை வழங்குவார்.

இந்த விதிமுறையை அறிந்திடாத சிலர், பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு பின்னர் அனுமதி கோரியிருக்கிறார்கள். இன்னும் சிலர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்த அதே கையோடு, உயர் கல்வி கற்பதற்கான அனுமதி கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கும் முறையாக விண்ணப்பித்திருப்பார்கள். ஆனால், படித்து முடித்து பட்டமும் வாங்கிவிட்ட பின்னரும்கூட, துறை சார்ந்த அனுமதி கிடைக்கப் பெறாதவர்களும் உண்டு. இப்படி பல்வேறு காரணங்களாலும் முன் அனுமதி பெறாதவர்கள் எண்ணிக்கை தமிழ்நாடு முழுக்கவே குறைந்தது 5,000 ஆசிரியர்களாவது இருக்கும்.


இவர்களுக்குப் 'பின்னேற்பு ஒப்புதல்' என்ற அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் அனுமதி கொடுத்துவந்ததும் கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் திடீரென பின்னேற்பு ஒப்புதலையும் நிறுத்திவிட்டனர். இது விஷயமாக ஆசிரியர் சங்கங்களும் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, 'பின்னேற்பு ஒப்புதல்' வழங்கக்கோரி கேட்டுவந்தோம்.

ஓர் ஆசிரியர் படிப்பது என்பது நல்ல விஷயம்தானே... ஆனால், அதையேகூட அரசாங்கம் குற்றமாகப் பார்த்துத் தண்டனை கொடுத்தால் அதை என்னவென்று சொல்வது? அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் கொடுத்துவருகிறார்கள். ஆனால், இப்போதோ உயர் கல்வி படித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்'' என்கிறார் வேதனையோடு.


 - ச.மயில் - முத்துசாமி
இந்த நிலையில், மூத்த ஆசிரியரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவருமான முத்துசாமி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ''இது புது பிரச்னை அல்ல... ஏற்கெனவே கடந்த 3 வருடங்களுக்கு முன்பே 'அனுமதி பெறாமல் எப்படிப் படிக்கலாம்... எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சொல்லி, அப்போதைய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார்.

உடனே ஆசிரியர் சங்கத்தினர் அனைவரும் துறை ரீதியாக உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். முடிவில், இந்த ஒருமுறை மட்டும் சிறப்பு அனுமதியாக 'பின்னேற்பு அனுமதி கொடுக்கிறோம்' என்று ஒப்புதல் கொடுத்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் 'பின்னேற்பு ஒப்புதல் வழங்கக்கோரும் விளக்கக் கடிதம்' பெற்று அதைப் பள்ளிக் கல்வித்துறையிடமும் சமர்ப்பித்திருந்தோம்.

2021-2022 ம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் மற்றும் நிலையான படிகள் தயாரித்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!

CLICK HERE TO DOWNLOAD

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

G.O 65-ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

Click here

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்,பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் நாளை (31-07-2020) வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


மறைந்த முதல்வர் #ஜெயலலிதா வின் #போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்த சொத்துகளின் விவரங்கள் - #தமிழகஅரசு அரசிதழில் வெளியிட்டது..சொத்து பட்டியல் விவரம்


பகுதிநேர பயிற்றுநர்களுக்கு (Part Time Instructors) ஜூலை 2020 மாத ஊதியம் வழங்குவது தொடர்பாக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்


InspireAward பதிவு செய்யும் முறைகள்

DSE PROCEEDINGS-National innovation Foundation Inspire Award - Science teachers online meet programme

NHIS- மருத்துவமனை பெயர் இல்லை என்றாலும் பரவாயில்லை. Apply செய்யுங்கள் . (அல்லது )நீங்க உங்க சொந்த பணத்தை மருத்துவமனைக்கு செலுத்தி விட்டு Reimbursement. செய்யலாம் அதற்கான CLAIM FORMAT மற்றும் GOVT LETTER

Corona சிகிச்சைக்கு மட்டும் 


CLICK HERE TO DOWNLOAD GOVT LETTER

CLICK HERE TO DOWNLOAD CLAIM FORMAT

National Education Policy-Agenda- Full Script

CLICK HERE TO DOWNLOAD -PDF FILE- FULL AGENDA

அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் வரும் ஆசிரியர்கள் (M.Phil, PhD தவிர) உயர்கல்வி பயில முன் அனுமதி ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி சார்ந்த உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களே வழங்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை

_தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஈழுவா மற்றும் தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க அரசாணை வெளியீடு...

CLICK HERE

01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு!!!


பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிலை(Level-10),ல் உச்ச பட்ச ஊதியம் நிரல் 40 இக்கு இணையான ஊதியம் 65 , 500 அடைந்துவிட்ட ஆசிரியர்களுக்கு, தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கக் தெளிவுரைகள்வழங்கிடக் கோரி நிதித்துறை செயலருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்

ஆசிரியர்களுக்குண்டான ஊக்க ஊதியம் அனுமதிக்கும் அரசானைகள் தற்போதும் நடைமுறையில் உள்ளன,மேலும் அரசானை 37 ந் நோக்கம் ஆசிரியர்களுக்கு பொருந்தாது-பள்ளிக்கல்வித்துறை செயலர்,ஆணையாளர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ,பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு நமது இயக்கம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம்

அரசாணை 101 ல் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு