டோக்கியோ : உணவு பரிமாறும்போது, வாயையும், மூக்கையும் மூடிக் கொள்வதற்கான
துணியை கொண்டு வராததால், 7 வயது மாணவியின் வாயை டேப் போட்டு ஒட்டினார்
ஆசிரியர். ஜப்பான் பள்ளிகளில் வித்தியாசமான நடைமுறை உள்ளது. அதாவது, மாணவ,
மாணவிகள் அனைவரும் மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு வரவேண்டும். அதை
ஏதாவது சில மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிமாறுவார்கள். அதை
பரிமாறும்போது, அந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து கிருமிகள் மற்றவர்களுக்கு
பரவிக் விடக்கூடாது என்பதற்காக, பரிமாறும் மாணவ, மாணவிகள் வாய், மூக்கை
மூடிக் கொண்டிருக்கும் வகையிலான துணியை கட்டிக் கொள்ள வேண்டும்
.
இது ஜப்பான் பள்ளிகள் அனைத்திலும் தவறாமல் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் டோக்கியோவின் வடபகுதியில் உள்ள டோசிகி நகரில், ஆரம்பப்பள்ளி மாணவி ஒருவர் வாயையும், மூக்கையும் மூடிக் கொள்வதற்காக துணியை கொண்டு வரவில்லை. அவர் பரிமாறுவோர் பட்டியலில் இருந்தார். இதனால் வகுப்பு ஆசிரியர் அவளது வாயில் டேப் போட்டு ஒட்டியுள்ளார். அதன்பின்னரே சிறுமியை உணவு பரிமாற சம்பந்தப்பட்ட ஆசிரியர் அனுமதித்துள்ளார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்தது. இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு பலர் தொலைபேசியில் ஆசிரியரின் அநாகரீகம் குறித்து விமர்சித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சம்ந்தப்பட்ட ஆசிரியர், மாணவியிடமும், அவளது பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

No comments:
Post a comment