01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப்
பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று,
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ,
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள் இன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில்
தேர்வுநிலை பெறவில்லை என்ற காரணத்தினால் தொடக்கப்பள்ளி தேர்வுநிலை தர ஊதியத்தை (GP 5400) பெறாமல் தர ஊதியம் பட்டதாரி ஆசிரியர்கள் 4600, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 4700 எனகுறைவாக தர ஊதியம் பெற்று
வருகின்றனர்.
இவர்கள் பட்டம் படித்து பட்டதாரி ஆசிரியராகவோ,அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறாமல் இருந்திருந்தால் இவர்களும் அவர்களைப்போன்று தர ஊதியம் 5400 பெற்றிருப்பர்
.
.
பட்டம் படித்தது தவறா?............. பதவி உயர்வு பெற்றது தண்டனையா............? என ஆசிரியர்கள் வருத்தம்
தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்குமா.. 4(3) விதி படி ஊதிய நிர்ணயம் செய்ய அனுமதித்தால் இப்பதிப்பு விலகி தர
ஊதியத்துடன் (5400) கூடிய ஊதிய பாதுகாப்பு கிடைக்கும்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.எனவே அரசு விரைவில் இவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா என ஏக்கம் /
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.எனவே அரசு விரைவில் இவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா என ஏக்கம் /
No comments:
Post a comment