Sunday, 15 September 2013

"நெட்" தேர்வு குளறுபடி: விவரம் வெளியிட மாணவர்கள் கோரிக்கை

"நெட்" தேர்வு குளறுபடி: விவரம் வெளியிட மாணவர்கள் கோரிக்கை

சென்னை: "நெட்" தகுதி தேர்வில் நடந்த குளறுபடிக்கு, யு.ஜி.சி.,யின் தெளிவில்லாத விளம்பரமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, யு.ஜி.சி., மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தேசிய தகுதி தேர்வான, "நெட்"டை, ஜூன், டிசம்பர் ஆகிய, இரு மாதங்களில் நடத்துகிறது. மாநில அளவில்
நடத்தப்படும் ஸ்லெட், அகில இந்திய அளவில் நடத்தப்படும், நெட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில், வெற்றி பெற்றவர் மட்டுமே, கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிய தகுதியுடையவர்.
நெட் தேர்வில், 350 மதிப்பெண்களுக்கு, "அப்ஜெக்டிவ்" கேள்விகளுடன், கட்டுரை எழுதும் வகையிலான கேள்வியும் கேட்கப்படுகிறது. யு.ஜி.சி., 2012, ஜூன் மாதம் நடத்திய, நெட் தேர்வுக்கு, அனைத்து கேள்விகளும், "அப்ஜெக்டிவ்" முறையில் இருக்கும் என, அறிவித்தது. இந்த தேர்வை, நாடு முழுவதும், எட்டு லட்சம் பேர் எழுதினர். இதில், 40 ஆயிரம் பேரே தேர்ச்சி பெற்றனர்.
ஆனால், "யு.ஜி.சி., அறிவித்துள்ள, தகுதி மதிப்பெண் பெற்றுள்ளோம்; எங்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும்" என, 300க்கும் மேற்பட்டோர் கேரளா மற்றும் நாக்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து விசாரித்த கோர்ட், "பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, உடனே, யு.ஜி.சி., சான்றிதழ் வழங்க வேண்டும்" என தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், யு.ஜி.சி., வழக்கு தொடர்ந்தது. "தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் போது, தகுதி மதிப்பெண்ணுடன், தேர்வில் வெற்றி பெறுவதற்குரிய தகுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து தகுதிகளை பெற்றவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றங்களின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாது" என மேல்முறையீட்டு மனுவில், யு.ஜி.சி., கூறியுள்ளது.
கேள்வித்தாள் மாற்றத்துக்கு பின், தேர்வில் நடைபெற்ற குளறுபடி குறித்து, நெட், ஸ்லெட் சங்க செயலர் சுவாமிநாதன் கூறியதாவது: கடந்த, 2012, ஜூன் மாதம் நடந்த, நெட் தேர்வு குளறுபடிகளுக்கு, தெளிவில்லாத விளம்பரமும், கேள்வித்தாள் அமைப்பு மாற்றமுமே காரணம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறை, நல்ல ஆசிரியரை தேர்வு செய்ய உதவாது.
எனவே, பழைய முறையை பின்பற்றி, தேர்வுகளை நடத்த வேண்டும். இல்லையெனில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள தேர்வில், கேள்விகளுக்கு தவறான விடை அளிப்பதற்கு, "மைனஸ்" மதிப்பெண் வழங்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும்.
யு.ஜி.சி., இனி அறிவிக்கும், நெட் தேர்வு விளம்பரங்களை, தெளிவாக மாணவர்களுக்கு புரியும் வகையில் வெளியிட வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் கூறினார்.
கடந்த, 2012, ஜூன் மாதம் நடந்த," நெட்" தேர்வு குறித்து யு.ஜி.சி., அளித்த விளம்பரத்தில், மாணவர்களின் தேர்ச்சி முறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர விவரம், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது. முழு தகவல்களுக்கு தெளிவாகவும் இல்லை. இதனாலேயே குளறுபடிகளும் நிகழ்ந்துள்ளன.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats