rp

Blogging Tips 2017

அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும்மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன. இதையடுத்து, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, புத்தகங்களை மாணவர்களின் வயதுக்கு ஏற்ப, பிரித்துஅடுக்கி வைக்க வேண்டும். எளிதில் எடுக்கும்படி, இருக்க வேண்டும். தினமும் புத்தகங்கள் படிப்பதற்கு, நேரம் ஒதுக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் நடக்கும் வழிப்பாட்டு கூட்டத்தில், அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats