5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 21 December 2013

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள்: அதிகாரிகள் விசாரணை

தனியார் துறையின் கீழ் இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.  இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய கல்வி தகுதி இல்லாமல் போலி சான்றிதழ் கொடுத்து பேராசிரியர் மற்றும் ஊழியர் பணிகளில் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.
 இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பேராசியர்கள் பலருக்கு உரிய தகுதி இல்லாமலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்பட்டன. பேராசிரியராக பணிக்கு சேருபவர்கள் குறிப்பிட்ட காலம் பணியாற்றியதற்கு பிறகே அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்கப்படும்.  ஆனால் அந்த குறிப்பிட்ட காலம் பணியாற்றாதவர்களுக்கும் விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி பல்கலைக்கழக உயர்மட்ட அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதில் 30–க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.  அவர்களை உடனடியாக பதவி இறக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது எந்த தகவலையும் சொல்ல மறுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment


web stats

web stats