Labels

rp

Blogging Tips 2017

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் அவ்ளோ தான்! : கர்நாடகாவில் எஸ்மா அமலுக்கு வந்தது


வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை, எவ்வித வாரன்டும் இல்லாமல், ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகளில், கைது செய்யும் வகையில், கர்நாடக அரசு, எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க உள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமய்யா
தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அடிக்கடி, ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால்,
மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அம்மாநில சட்டசபையில், எஸ்மா சட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்களை, எந்தவித வாரன்டும் இல்லாமல் கைது செய்யவும், அவர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்யவும் முடியும்.இந்த சட்டத்தில் கைது செய்யப்படும் ஊழியர்களுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.
ஸ்டிரைக்கை தூண்டி விடுவோர், ஸ்டிரைக்கிற்கு, நிதி உதவி செய்வோருக்கும், இந்த சட்டம் பொருந்தும்.
இந்த சட்டம், ஓர் ஆண்டுக்கு அமலில் இருக்கும் என, கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a comment