5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Tuesday, 17 December 2013

பள்ளிக்கு ஆசிரியர் வராததால் தேர்வை புறக்கணித்த மாணவர்கள்

கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ஆசிரியர் சரியாக வராததால் பிளஸ் 1 மாணவர்கள், நேற்று நடந்த கணிதத் தேர்வை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த, கோவிலூர் அரசு உயர்நிலைப் பள்ளி நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வரதராஜன், கோவிலூர் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த, ஆக., 2ல், கோவிலூர் பள்ளியில் பணியாற்றிய அவர், பிளஸ் 1 மாணவர்களுக்கு, கணிதம், அறிவியல்; ஆறாம் வகுப்பிற்கு கணித பாடம் நடத்தினார். பணியேற்ற நாளிலிருந்து, அவர் அடிக்கடி விடுப்பில் சென்றுள்ளார். இதனால், அவரது இரண்டு மாத சம்பளத்தை, கல்வித் துறை நிறுத்தி வைத்தது; மற்ற ஆசிரியர்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு கணித பாடம் நடத்தவில்லை.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்து, தினமலர் நாளிதழில், டிச., 2ல், செய்தி வெளியானது. நேற்று, பிளஸ் 1 மாணவர்களுக்கு அரையாண்டு கணிதத் தேர்வு நடந்த நிலையில் அனைத்து மாணவ, மாணவியரும், தேர்வை புறக்கணித்து பள்ளி முன், தர்ணாவில் ஈடுபட்டனர்.
சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கூறியதாவது: ஆசிரியர் வரதராஜன் ஏற்கனவே பணிபுரிந்த, விருதுநகர் பள்ளியில், துறை ரீதியான நடவடிக்கை காரணமாக, கோவிலூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அவர், பணிக்கு வந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 10 நாட்கள் கூட பள்ளிக்கு சரியாக வரவில்லை. அடிக்கடி மருத்துவ விடுப்பில் சென்று விடுவார்.
அவரது நடவடிக்கைகள் குறித்து, கல்வித் துறை இணை இயக்குனருக்கு, ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் பள்ளிக்கு வராததால், கோவிலூர் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் அரையாண்டு கணிதத் தேர்வை புறக்கணித்துள்ளனர். ஆசிரியர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க, கல்வித் துறை இணை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment


web stats

web stats