Labels

rp

Blogging Tips 2017

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் DD Amounts:


உண்மைத்தன்மை என்றால் என்ன?
ஒருவர் படித்து பட்டம் பெற்றபின் அப்பட்டம் (Convocation /Degree Certificate) அப்பல்கலைக்கழகத்தால் தான் வழங்கியது என்று அப்பல்கலைக்கழகம் மூலம் பெறும் சான்றே” உண்மைத்தன்மை” (Genuous) எனப்படும், (போலியாக படித்தது போன்று பட்டம் பெறுவதை தடுக்கவே இந்த நடைமுறை).



 பெறும் முறை
தனிநபர் தனது  படிப்பின் பட்டம் (Convocation /Degree) சான்றிதழின் ஒளிநகலுடன்(ஜெராக்ஸ் காபி)  அதற்குண்டான கட்டணத்தொகைக்கான DD ஐயும் இணைத்து சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பி தனதுசான்றிதழின் உண்மைத்தன்மையை சான்றாக பெறலாம்.

* இந்த விண்ணப்பத்தினை தலைமையாசிரியர் வழியாகவும்,அல்லது, AEEO மூலமாகத் தான் அஞ்சல் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிப்பெற வேண்டும்.

 பல்கலைக்கழகமும்  அத்ன் ,உண்மைத்தன்மை சான்று பெற கட்டணங்களும்

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 375

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-300

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100

5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.

7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500

10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-500

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

13. Tamilnau teacher education university -350.

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.


நன்றி
இதனை தொகுத்திட முகநூல் மூலம் முயற்சி எடுத்த
Teachers Friend Devarajan,
Thanjavur. அவர்களுக்கு www.tntf.in- வாழ்த்தையும் நன்றியையும்தெரிவித்துக்கொள்கிறது

No comments:

Post a comment