Labels

rp

Blogging Tips 2017

Free Online Test For 10th & 12th Standard Students. =THANKS TO www.padasalai.net

அன்புள்ள ஆசிரியர்களே, மாணவர்களே வணக்கம்.



           10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்காக பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் பாடவாரியாக, தலைப்பு வாரியாக பாடசாலையின் தன்னார்வலர் - ஆசிரிய பெருமக்கள் உதவியுடன் பதிவேற்றப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பாடப்புத்தகத்தின் பயிற்சிகளில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது. படிப்படியாக இதர முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்களும் பதிவேற்றப்பட உள்ளது. 

இத்தேர்வுகளின் சிறப்பம்சம்-

1. இவை இலவச ஆன்லைன் தேர்வுகள்.
2. குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் முடித்தாக வேண்டிய நிர்பந்தம்.(நேர மேலாண்மை பயிற்சி)

3. ஒவ்வொரு முயற்சியின் போதும் கேள்விகள், மற்றும் பதில்கள் வரிசை மாறிக்கொண்டே இருப்பதால் கேள்விகளை மனப்பாடம் செய்ய இயலாமல், புரிந்து படித்து விடையளிக்க வேண்டிய கட்டாயம். (Question & Answers Shuffle Every Attempt )
4. தேர்வுகள் முடித்தவுடன் உடனடியாக மதிப்பெண்களையும், சரியான விடைகளையும் அறிந்து கொள்ளும் வசதி உண்டு. தேவைப்பட்டால் வினா, விடைகளை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும் இயலும்.
5. குறைந்த கற்றல் திறன் கொண்ட மாணவர்களும் எளிதாகவும், ஆர்வமாகவும் பயிற்சி பெறும் வகையிலான Play Way Method.
6. முழுக்க தேர்வு கண்ணோட்டத்தில் அமைக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினா விடைகள்.
7. ஆங்கில வழிக்கல்வி மற்றும் தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு தனித்தனியாக பயிற்சிகள்.
8. ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து OHP Projector மூலம் பயிற்சி அளிக்க இயலும்.
9. மாணவர்கள் தாங்களாகவே தங்கள் வீட்டில் உள்ள இணைய வசதியுடைய கணிணியின் மூலம் பலமுறை தங்களை தாங்களே சோதித்தறிய இயலும்.
10. மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வினாக்கள் உள்ளன.
11. மாணவர்கள் எளிதில் கண்டறிய இயலும் Links உள்ளன.
12. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மட்டும் அல்லாமல் TET, TRB, TNPSC மற்றும் இதர போட்டித் தேர்வுகள் எழுத உள்ள அனைவரும் இந்த இலவச ஆன்லைன் தேர்வுகளை எழுதி பயிற்சி பெற முடியும்.

THANKS TO 
www.padasalai.net
AND
Direct Links Available in www.TrbTnpsc.com Website.

No comments:

Post a comment