Labels

rp

Blogging Tips 2017

இனி ஆண்டுக்கு 12 சிலிண்டர் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை 9லிருந்து 12ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12ஆக உயர்த்த ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் ராகுல் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது மானிய விலையிலான சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த சிலிண்டர் எண்ணிக்கை வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அரசுக்கு ரூ.80,000 கோடி நிதிச்சுமை அதிகரிக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி தகவல் தெரிவித்துள்ளார். ஆதார் அட்டை மூலம் மானியம் வழங்கும் திட்டம் தள்ளி வைக்கப்படுவதாகவும் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment